three 1
வீட்டுக்குறிப்புக்கள்

அடேங்கப்பா! 3 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மூன்றாம் எண் ஆதிக்கக் காரர்கள் ஆவார்கள். இந்த எண் குருவின் ஆதிக்கத்தில் வரும் எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக மேன்மையான வாழ்க்கை வாழ்வார்கள். இவர்களிடம் தன்னம்பிக்கை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனபான்மை, நேர்மை, விடா முயற்சி, பிறருக்கு உதவும் குணம் போன்ற நற்பண்புகள் அனைத்தும் இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும்.

இவர்கள் மற்றவர்களுக்குப் நல்ல விஷயங்களை சொல்லி கொண்டே இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். இவர்கள் என்னதான் நல்லவர்களாக இருந்தாலும் வீட்டில் என்னவோ இவர்களுக்கு நல்ல பெயர் கிடைப்பது அரிது தான்.

இவர்கள் நிறைய நண்பர்களை பெற்று இருப்பார்கள். பிறரிடம் உதவி கேட்க கூச்சப்படுவார்கள். தரம் தாழ்ந்த வேலைகளில் ஈடுபட விரும்ப மாட்டார்கள். பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கக் கூடியவர்கள். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் சளைக்காமல் செய்பவர்கள்.

இவர்கள் மனதில் பட்டதை எதையும் மறைக்காமல் துணிந்து சொல்வார்கள், மற்றும் அதையே செய்வார்கள். மகிழ்ச்சியோ, வருத்தமோ எதுவாக இருந்தாலும் எதையும் அதன் போக்கில் அணுகுவார்கள்.

பார்ப்பதற்கு கடுமையானவராக சில சமயங்களில் இருந்தாலும், இவர்கள் மனம் இளகிய மனது உடையவராக இருப்பார்கள். எதையும் ஒன்றுக்கு பல முறை யோசித்து தான் செய்வார்கள். பிறரை கெடுத்து தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் துளியும் இருக்காது. இவர்கள் எதையும் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டார்கள்.three 1

இவர்கள் மிகவும் கடினமாக உழைத்துத் தான் வாழ்க்கையில் முன்னேற விரும்புவார்கள். குறுக்கு வழியில் செல்வது இவர்களுக்கு பிடிக்காது. பிறரை பார்வையாலே எடை போடுவதில் வல்லவர்கள். தங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் காரியங்களில் இவர்கள் ஒரு போதும் ஈடுபட மாட்டார்கள். ஏதாவது ஒரு மொழியில் புலமையோடு இருப்பார்கள்.

உலகத்தை பற்றிய அனுபவ அறிவு இவர்களுக்கு நிறைய இருக்கும். தன் வசீகர பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள். இவர்களுக்கு தன்னம்பிகையுடன் துணிச்சலும் அதிகம் இருக்கும்.

இவர்களுக்கு நோய்கள் என்று பார்த்தால் தலை சம்மந்தமான நோய்கள் தான் அதிகம் வரும். இது தவிர நரம்பு மண்டலம் பாதிக்கலாம். இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய நோய்கள் வராமல் இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். குடல் சம்மந்தமான நோய்கள் கூட சிலருக்கு வரலாம். ஆடம்பரமாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

Related posts

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

nathan

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம்

nathan

வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்!

nathan

வீட்டுக்குறிப்புக்கள்!

nathan

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

nathan

உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க சில முக்கிய விஷயங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தாய் வீட்டிலிருந்து இதையெல்லாம் கணவன் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள்!

nathan

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

nathan