26.1 C
Chennai
Sunday, Aug 17, 2025
unnamed 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மாதவிடாய் தாமதமாக காரணம் என்ன?

மாதவிடாய் என்பது, ஒரு பெண்ணிற்கு முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் முறையாக வரவேண்டும். அவ்வாறு வராமல் இருக்க பல காரணங்கள் உள்ளது. அவற்றை பார்ப்போம்

மன அழுத்தம்

வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கும் முக்கிய காரணி மன அழுத்தம். அதில், ஒன்று மாதவிடாய். சில வேளைகளில் மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக, மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகின்றது.

உடல்நலக் குறைவு

திடீரென ஏற்படும் நோய், குறுகிய கால நோய் அல்லது நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தமதபடுத்தும். இது தற்காலிகமானதுதான்

அட்டவணை மாற்றம்

குறிப்பாக பகலில் உறங்கிவிட்டு இரவில் விழித்திருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி தோன்றும். அதேபோல், இரவில் பணிபுரிபவர் பகலில் மாறும்போதும் இந்த பிரச்னை ஏற்படும். எனவே ஒரே கால நேரத்தில் பணி செய்வது சிறந்தது.

மருந்துகள் மாற்றம்

ஏதேனும் ஒரு நோய்க்கு மாத்திரைகள் தொடர்ந்து எடுத்து வந்தால், அந்த மாத்திரை மாற்றும் போது இந்த பிரச்னை ஏற்படுகின்றது. சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இதுபோன்ற பிரச்னைகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றது.

அதிக எடை

அளவுக்கு அதிகமாக எடை இருந்தால் ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன் அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும் மீண்டும் சாதாரணமாக மாதவிடாய் ஏற்படுவதுண்டு.

எடைகுறைதல்

உடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும்.unnamed 1

தவறாக கணித்தல்

மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள்.

பெரி-மாதவிடாய்

பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும்.இந்த கால கட்டத்தில் மாதவிடாய் லேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரும்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.

இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்க கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மீண்டும் பயன்படுத்த கூடிய துணி நாப்கின்களை பயன்படுத்துவது சரிதானா?

nathan

காயங்களை போக்கும் கற்றாழை!

nathan

உடல் பிரச்சனைகளை போக்கும் கிராம்பு வைத்தியம் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்

nathan

நீங்கள் அடிக்கடி வெந்நீர் குடிப்பவரா ? அவசியம் படிங்கள்….

nathan

ரத்தத்தில் ஒளிந்திருக்கும் 3 மாத ரகசியம்!

nathan

தலையில் கோர்த்துக்கொள்வதற்கான காரணம் – தீர்வு

nathan

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

nathan

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்

nathan