28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ghj
அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள்.. தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

சருமத்தின் பொலிவையும், அழகையும் அதிகரிப்பதற்காக நாம் அழகு நிலையங்களுக்கு சென்று அதிகமான பணத்தை செலவு செய்து நம் முக அழகை அதிகரிக்கிறேம் ஆனால் இதை எல்லோராலும் செய்ய முடியாது.

பணம் உள்ளவர்கள் மட்டும் இது போன்ற அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் அழகை அதிகரிக்க முடியும். அதுவே பணம் இல்லாமல் நடுநிலையாக வாழ்க்கையை வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் முக அழகை அதிகரிப்பதற்காக வீட்டில் இருக்கும் தயிரைப் பயன்படுத்தி அழகு நிலையத்திற்கு இணையான அழகை பெறலாம்.
தயிருடன் நாம் வீட்டில் பயன்படுத்தும் ஒரு சில அத்தியாவசிய பொருட்களை வைத்து நம்முடைய முக அழகை அதிகரிக்க முடியும். இதனால் உங்கள் சரும பிரச்சனைகள் நீக்கி உங்கள் சருமத்தை பொலிவாக மாற்ற முடியும்.

ஒரு கப் தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகம் முழுக்க நன்கு தேய்க்க வேண்டும். 10 நிமிடத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இருமுறை செய்தால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.
வெந்தயத்தை இரவு தூங்குவதற்கு முன்பு நீரில் ஊறவைத்துவிட வேண்டும். பின்பு காலை எழுந்து அதை அரைத்து ஒரு ஸ்பூன் தயிர் கலந்து நம் முகத்தில் பேஸ் மாஸ்க் போட வேண்டும். அதை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் இழுந்த உங்கள் சருமத்தின் பொலிவை மீண்டும் பெற முடியும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து முகத்தில் பத்து போட வேண்டும். பின்பு அதை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்தில் இருமுறை செய்வதன் மூலம் உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
ghj
தயிருடன் சிறிதளவு தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதுமாக தேய்த்து கொள்ள வேண்டும். பின்பு பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் உங்கள் சருமம் சமமான நிறத்தில் இருக்கும்.
இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழை ஜெல் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து முகம் முழுக்கத் தேய்க்க வேண்டும். பின்பு காலையில் எழுந்து அதை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் நிரந்தரமாக பளிச்சென்று இருக்கும்.
உங்கள் சருமத்தில் உள்ள கருமை நீங்க வேண்டும் என்றால் தயிருடன் சிறிதளவு தக்காளியை சேர்த்து ஒன்றாக அரைத்து முகம் முழுக்க தடவ வேண்டும். இதை 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் சருமம் பளீர் என்று இருக்கும். அதே போல் தயிருடன் பப்பாளியை சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பு முகம் முழுக்க தடவிக் கொள்ள வேண்டும். பின்பு காலையில் எழுந்து கழுவினால் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.

சிறிதளவு அரிசி மாவுடன் தயிரை கலந்து முகம் முழுக்க ஃபேஸ் மாஸ்க் போல் போட்டு கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அதை கழுவி உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்கள் முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மையாகவும், அழகாகவும் தெரிவீர்கள் இதை வாரத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். எனவே இதுபோன்ற எளிய வழிகளைப் பயன்படுத்தி உங்கள் அழகை அதிகப்படுத்துங்கள். அதே போல் உங்கள் நண்பர்கள் அல்லது தோழிகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள்.

Related posts

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

அடேங்கப்பா! அப்பாவுடன் புத்தாண்டை கொண்டாடிய அக்சராஹாசன்…..

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

முக பருவை போக்க..,

nathan

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குக

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

ரோஹித் சர்மாவுக்கு திடீரென ஏற்பட்ட காயம்..

nathan

என்ன ​கொடுமை இது? இப்படியா பண்ணும் இந்த பொண்ணு..??

nathan

இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும்…..

sangika