25.6 C
Chennai
Sunday, Dec 15, 2024
v
அழகு குறிப்புகள்

7, 16, 25ஆம் எண்ணில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் -அப்படி என்ன ஸ்பெஷல்?

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 1

கேதுவில் சூரியன் சேர்ந்து தரும் ஆதிக்கப் பலன். மாநிறமாகவும், உயரமாகவும் இருப்பார். சற்று சதைப்பற்றுடன் அழகாக இருப்பர்.

பிறரை அடக்கி ஆள நினைக்கிற போக்கு உண்டு. ஆணித்தனமான பேச்சு இருக்கும். அறிவு நிறைந்தவர். பெருந்தன்மையுள்ளவர். அழுத்தமான மனிதர். ஆனால் தயக்கம் உள்ளவர். மனத்திடமும், விதியின்மேல் நம்பிக்கையும் இருப்பவர்.

பிறந்தது முதல் கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருப்பர். கல்வி தடைப்படலாம். மானத்தைப் பெரிதாக மதிப்பவரானபடியால் நியாயம், சட்ட திட்டங்களை மீறாமல் கட்டுப்பட்டு நடப்பர். நகைச்சுவை உணர்விருக்கும். சகிப்புத் தன்மையுடன் இருப்பர். மனித நேயமும் பிரதிபலன் எதிர்பாராத அன்மிருக்கும்.

காதலித்து மணக்கலாம். திருமணம் நிம்மதியைத் தராது. தாமதமாகத் திருமணம் நடக்கும். வாரிசும் தாமதமாகலாம். பெற்றோரில் ஒருவரை இளம் வயதில் இழந்திருப்பர். பொருளாதாரம் பிற்பகுதி வாழ்வில் சரிப்படும்.

கலையார்வம் இருக்கும். சினிமாவில் முயன்றால் நல்ல உயர்வு கிடைக்கும். கல்வி தடைப்பட்டாலும் முயன்றால் மீண்டும் தொடரலாம். பத்திரிக்கை, தொழிற்சாலை தொடர்பாக வேலை செய்வர். நடுவயதிலேயே தொழிலில் ஒரு நிரந்தரம் அமையும்.

சிறுவயதில் அடிக்கடி காய்ச்சல், மூச்சுக் கோளாறு பாதிக்கும். சளி, கபம் தொடர்பான நோய் போல, உஷ்ண சம்பந்தமான நோய்களும் உண்டாகும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 2

 

கேதுவுடன் சந்திரன் இணைந்த ஆதிக்கப்பலன். இவர் உயரமாக இருக்க மாட்டார். சிவப்பாகவும் புருவங்கள் அடர்ந்திருக்கும்.

தெய்வ பக்தி நிறைய இருக்கும். அபார திறமையுள்ளவர். மனம் அலைபாயும். இசையறிவும் கலாரசனையும் இருக்கும். முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். திடீர் திருப்பம் உண்டாகி நல்ல வாய்ப்பு உண்டாகும். வெளிப்பார்வைக்கு சகஜமாக அனைவரிடமும் பழகுபவர்கள் போல இருப்பர்.

பழகுவதில் பண்பாளர். அச்சமும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே வாழ்க்கையை நடத்துவர். ஆன்மிக நாட்டமுன்டு. எழுத்து, கவிதை எதிளில் வரும்.

திருமணம் தடைப்படும். தாமதமாக நடக்கும். நல்ல வகையில் திருமணம் நடக்கும். வீட்டில் தங்கவே மாட்டார் என்பதால் வம்பு வழக்குண்டாகும். ஆனால் குடும்பவாழ்வு நீட்டிக்கும்.

எழுத்து, இசைத் துறைகளில் ஈடூபட்டுத் தொழில் பண்ணுவர். சோதிடராகச் சிறக்க முடியும். சட்டம் படித்து வக்கீலாக, நீதிபதியாகப் பணிபுரிவார். அபாரமாகப் பேசுவார். நன்றாக எழுதுவார்.

நீரிழிவு நோய் வரும், கபம் தொடர்பான நோய்கள் வரும். மூட்டு வலி ஏற்படும். எளிதாக ஜலதோஷம், வயிற்றுவலி ஏற்படும். கண் கோளாறு உண்டாகும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 3

 

கேதுவுடன் குரு சேர்ந்த ஆதிக்கப் பலன் இவருக்கு. உயரமாக இருப்பர். உருண்டை முகத்தில் நெற்றி மேடாக இருக்கும்.

தெய்வ பக்தி உள்ளவர். பரம்பரைப் பழக்க வழக்கங்களில் பற்று, குடும்பப் பாசம், மதப்பற்று, தத்துவ அறிவு பூசை முதலியவற்றைக் கொண்டிருப்பர். நல்ல ரசிகர். ஆடையலங்காரமும் செய்து கொள்ளுவார். இவர்களை பார்த்தால் அப்பாவி போல இருப்பார்.

பழமையை விடாமல் புதுமையில் ஏற்றத்தை விரும்புவார். குடும்பம், நாடு, இனம், மொழி என்று அனைத்துக் கருத்துக்களையும் கொண்டிருப்பார். உற்சாகம் இருக்கும் போது நன்கு பேசுவார். பிறரை நன்கு புரிந்து வைத்திருப்பர். இவர்கள் பேச்சை எளிதாகப் பிறர் நம்பி விடுவர். பல மொழிகள் பேச தெரிந்தவராக இருப்பர்.

கல்வி, தொழில், வாழ்க்கைத்துணை, வேலை என எல்லாம் இச்சைப்படியே தேர்ந்து எடுப்பார். காதல் விவகாரத்தில் அவமனப்பட நேரும். தோல்வியும் ஏற்படும். ஆனாலும் இவர்கள் மறுகாதல் விவகாரத்தில் போராடி வெற்றி பெறுவர்.

கற்பனை ஆக்கப்பூர்வமாக இருக்கும். எழுத்திலும் மேடைப் பேச்சிலும் நன்கு உதவும். ஆசிரியராக, எழுத்தராக, கணக்கராக, வேலையில் இருப்பர். இசை நடனம், தரகர், புரோகிதர் போன்றவற்றில் இருப்பர்.

கபம் தொண்டையைப் பாதிக்கும். பித்த வாந்தி, காய்ச்சல் ஏற்படும். வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் இருக்கும். கண் கோளாறு ஏற்படும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 4

 

இவருக்கு கேதுவுடன் ராகு சேர்ந்த ஆதிக்கப்பலன். சனியும் சுக்கிரனும் சேர்ந்த பலனைத்தரும். இவர்கள் கறுப்பாகவும், உயரமாகவும் இருப்பர். இனிமையாக பேசுவர். கூரிய பார்வை இருக்கும்.

மனம் சலனப்படும். கோபம் அதிகம் இருக்கும், பேச்சு கலகலப்பாக இருக்கும். ஒழுக்கம், கட்டுப்பாடு உடையவர். உடல் நன்கு வளையும். நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். யாருக்கும் அடங்கமாட்டார். இச்சைப்படி நடந்து வம்புகளில் சிக்குவர்.

இவர்களை புரிந்துக் கொள்ள முடியாமல் மற்றவர்கள் குழம்புவர். நன்கு சிந்திப்பார். பிறருக்கு வரும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள ஆலோசனைகள் மிகச் சுலபமாக வழிகாட்டிடுவர்.

ஓரளவு மன விகாரத்துடனே வாழ்வர். நன்றாக வருமானம் வரும். மனமொத்த துணையோடு, அழகான வாழ்க்கை அமையும். இல்லற இன்பத்தை விரைவில் வெறுத்துவிடுவர். படிப்பு, கல்வியில் மனம் இறுதிவரை செல்லும்.

கலை, கலை சார்ந்த தொழில் உண்டாகும். கதை, கவிதை, நாடகம், நடிப்பு என எல்லவற்றிலும் திறமை இருக்கும். இவர் எதிர்பாராத தொழிலே இவருக்கு அமையும்.

சாதாரணமாக இவர்களுக்கு நோய் பாதிக்காது. அஜீரணம், மலச்சிக்கல், வாதசுரம் உண்டாகும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 5

 

கேதுவில் புதன் சேர்ந்த ஆதிக்கம் இவருக்கு. நல்ல உயரம் இருக்கும். உருண்டை முகம் பெரிய தலையில் சிறியதாக அழகாக இருக்கும். அடர்ந்த புருவங்கள் இருக்கும்.

ஞானமும், உலகளாவிய உலகாயத அறிவும் இருக்கும். எவருக்கும் எந்தத் தீங்கும் செய்ய மாட்டார். தன்னம்பிக்கை உள்ள இவர்கள் சிறுதொழிலாகத் தொடங்கினாலும் பெரிய தொழிலாக்கும் திறமை உடையவர்.

படிப்பிலும் வேலையிலும் காலக் கெடுவைத் தவறவிட்டு விடுவர். பார்வைக்கு இவர்கள் அமைதியானர். ஆனால் கோபம் வந்தால் தூள் பறக்கும். பேச்சு சிலசமயம் விட்டுக் கொடுக்காமல் அக்கினிக் கணைகளாகப் பாயும்.

தந்தை, தாய் ஆதரவைவிட சுயமாக முன்னுக்கு வருவதையே விரும்புவர். நல்ல துணை அமையும். நண்பர்கள் அதிகம் அமைய மாட்டார். வீட்டிலும் யாரும் மனம் விட்டுப் பேசிப் பழக முடியாமல் இருப்பர்.

இவர்களுக்கு அபாரமூளை உண்டு. சூட்சும மனச் சக்தியும் இருக்கும். கலை சார்ந்த தொழிலில் ஆர்வமிருக்கும். பத்திரிக்கை பொருத்தமான துறை. ஜர்னலிஸம் படிக்காமலே நன்கு பத்திரிக்கை நடத்த இவரால் முடியும். கணினி விஞ்ஞானம், பொறியியல் படித்து இவை தொடர்பான வேலை பார்ப்பார்.

மன சிந்தனை வேகம் அதிகம். சுவாச நோய் வரலாம். இதனால் மூச்சுப்பை நோயுறலாம். ஆயுளதிகம் உண்டு. மூட்டுவலி பாதிக்கும். நரம்புத்தளர்ச்சி, பிபி, சர்க்கரை ஏற்படலாம்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 6

 

இவருக்கு கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்தளிக்கும் ஆதிக்கம். சராசரி உயரத்துடன் சதைப்பற்றுடன் இருப்பர். அழகாக இருப்பர். பெண்மை கலந்த கவர்சியான தோற்றம் இருக்கும்.

இவர்கள் துணிவு அதிகம் உள்ளவர். போராடக் கூடியவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாடு கண்ணியமுடையவர்கள். சிறுவயதிலேயே இவர்களின் மன உறுதியும் கெட்டிக்காரத்தனமும் வெளிப்படும். கற்பனை வளம் சிறந்திருக்கும். இளம் வயதில் துரதிர்ஷ்டம் துரத்தும்.

வெளிப்படையாகப் பேசி நடந்து கொள்ளும் குணம் கொண்டவர். காதலிப்பர். ஆனால் கல்யாணத்தில் முடியாது. 24 வயதுக்கு மேல் மனம் மிகவும் ஜாலியான மனிதராக இவரை காட்டும். 30க்கு மேல் ஒரு வழி புலப்படும். பிற்கால வாழ்க்கை அதிஷ்டமுள்ளதாக விளங்கும்.

வறுமை அல்லது பெற்றோர் ஆதரவு அற்ற நிலையில் பிரச்னைகளைச் சந்திப்பர். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேறிடம் சென்று கலை, கல்வித் திறமையால் சொந்தமாக வாய்ப்புப் பெற்று நன்றாக முன்னேறுவார்.

கலையை ரசிக்கும், உள்ளமும், மிகுந்த கல்வியனுபவமும் இருக்கும். இவர்கள் கவிதை, கதை, கட்டுரை, சினிமா, நாடகம் என அதிக ஆசையோடு அலைவர். உரிய சமயத்தில் வாய்ப்புக்கிட்டி மிக நல்ல நிலையடைவர்.

காய்ச்சல் அடிக்கடி ஏற்படும், சர்க்கரை, இதயப் பாதிப்பு ஆகிய நோய்கள் தாக்கக்கூடும். கண்ணில் தொந்தரவு வரும். மூச்சுத் தொல்லை சிறிது காலம் இருந்து நீங்கும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 7

 

கேதுவுடன் கேது சேர்ந்து முழுக் கேது ஆதிக்கம். உயரம் குறைந்ததாக இருப்பர். மாநிறமாகவும், முடி அடர்த்தியாகவும் இருக்கும். பார்த்தவுடன் பளிச்சென்று வெகுளி எனப்படும் தோற்றம். சிரித்த முகத்துடன் உற்சாகமாக இருப்பர்.

தூய ஆடையணிவர். சாந்தமானவர். கலவரம் சண்டை, சச்சரவை விரும்பாதவர். ஒளிவு மறைவு இருக்காது. உலக வாழ்வை எடை போட்டு அறியவும் செய்வர்.

படிப்பில் கவனம் செல்லும். இச்சைப்படி திரியவும், கண்காட்சி காணவும், கேளிக்கையில் ஈடுபடவும் செய்வர். இளவயதிலேயே கவிதை, கதை, நாடகம் என எழுதும் பழக்கம் உள்ளவர்.

காதல் குறுக்கிடும். படிப்பு தடையாகும். குடும்பம் இல்லாமலேயே வாழ்வில் முன்னுக்கு வர முயற்சிப்பர். வேற்று சாதி, மதப் பெண்களுடன் கலந்து பழகுவர். வாழ்வில் எல்லா கட்டத்திலும் இவர் மீது யாராவது அன்பு வைப்பர். முழு கிரக ஆதிக்கம் ஏற்படும் போது பிறந்த கூட்டு எண் ஒரே எண்ணாக அமைவது ஓர் அதிர்ஷ்டம்

கலை ரசிகத்தன்மை அதிகமாக இருக்கும். புலன்கள் கூர்மையாக இயங்கும். மேடைப் பேச்சும், எழுத்தும், கவிதை இயற்றுவதும் இவருக்கு நன்கு வரும். ரசாயனத் தொழிற்சாலையில், லேபரட்டரி, மதகுரு, போதகராக, யோகப் பயிற்சியாளராக, ஆன்மிக நூலியற்றுபவராக இருப்பார்.

அதிகச்சுடு என்பதால் அது சம்பந்தமான நோய்கள் உண்டாகும். வாதம், பித்தக் கோளாறுகள் ஏற்படும். 50 வயத்துக்கு மேல் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். சர்க்கரை வியாதி ஏற்படும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 8

 

இவர் கேதுவுடன் சனி சேரும் ஆதிக்கப் பலன் கொண்டவர். இவர்கள் குட்டையாக இருப்பார். உடலில் பலம் இருக்கும்.

தைரியமுள்ளவர். தெய்வ பக்தி கொண்டவர். நிறைய துயரங்களை, தடைகளைச் சகித்துக் கொள்ளுகிறவர். சிரித்துக் கொண்டே இருப்பர். பிறரும் மகிழ நகைச்சுவையாகப் பேசுவர். விநோதமான நடத்தையும் சிந்தனையும் கொண்டவர். தவம், யோகம், துறவு முதலியவற்றில் இளமையிலேயே ஆசை இருக்கும்.

எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் எவரிடமும் ஒட்டிவிட மாட்டார். செய்வதைச் சரியாகச் செய்வர். தொழிலில் திறமை நன்கிருக்கும். இவருக்கு நன்பர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள்.

சிலர் பிறந்த குடும்பம் வறுமையில் வாடும். ஆனாலும் குறையின்றி வாழ்வார். நன்றாகப் படிப்பு வரும். ஆனாலும் கல்விக்குத் தடை உண்டாகும். மனம் கூடித் தம் குடும்பத்தில் இவரால் வாழ முடியாது.

கடுமையான உழைப்பிற்கேற்ப உடலும் மனமும் கொண்டவர். எளிதாகச் செய்து அதிக லாபம் அடையக் கூடிய தொழில் அமையாது. கதை, கட்டுரை, கவிதை என்ற கலைத் தொழில் வாய்ப்பு நிறையக் கிடைக்காது. கட்டடம், சுரங்கம், சாலை போடும் தொழில்களில் வேலை செய்வாரும் உண்டு.

வயிற்றுவலி, தலைவலி, மூட்டுக்களில் வலி வரும். காய்ச்சல், தொற்றுநோய், தோல் நோய், அடிபடுதல், தீப்புண் நேரும். சர்க்கரை நோய், காசநோய், முடக்குவாதம் உண்டாகும்.

பிறந்த எண் 7-ல் கூட்டு எண் 9

கேதுவுடன் செவ்வாய் சேர்ந்த ஆதிக்கமாகும். சராசரி உயரமிருப்பர். தேகம் ஒல்லியாக உறுதியுடன் இருக்கும். சாதாரண நெற்றியிருக்கும். மாநிறமிருக்கும். முடி நிறைய இருக்கும்.

தெய்வபக்தி உள்ளவர். அதிகம் பிறரிடம் பழகமாட்டார். இரக்க மனமும் உதவும் குணமும் உண்டு. எப்போதும் மகிழ்வாக இருக்க விரும்புவார். காதலை விரும்பும் இவர்களுக்குக் காதல் நிறைவேறாது. ஒளிவு மறைவு இல்லாதவர். இதனால் இவரைப் பலரும் பயன்படுத்திக் கொள்ளுவர். நல்ல மனம் இருந்தும் தெய்வ பக்தி இருந்தும் மனவேதனை அதிகமாகும்.

காதலித்தே மணந்தாலும், பெற்றோர் பார்த்துச் செய்த மணமாயினும், வாழ்க்கைத்துணை சரிவராது. சந்தேகம் வாழ்வைக் கெடுக்கும்.

மருத்துவத்துறையில் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணராவர். நர்சாக இருப்பார். ரசாயனத் தொழிற்சாலை, சர்க்கஸ், ஜவுளிக்கடை, உலோகம் பயன்படுத்தும் தொழிற்சாலை, அக்னி உலை உள்ள இடத்தில் கணக்கு சம்பந்தமானதல் வேலை பார்ப்பர்.

கட்டட வேலை, தொழிற்சாலைத் தொழிலாளர்களாக இருப்பார். நடனம், இசை நன்கு வரும். இதில் புகழ் பெறலாம். மனோதத்துவ மருத்துவராக, தத்துவப் பேராசிரியராக இருப்பார்.

வயிற்றுவலி, அல்சர், வயிற்றில் புற்றுநோய் வரலாம். வாத சுரம், பிபி, இருமல் உண்டாகும். காச நோய், பித்த வாந்தி ஏற்படும்.

 

Related posts

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க……

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருத்தரித்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்!

nathan

குளிர்காலத்தில் பெண்களுக்கு சரும வறட்சி.. இதனை தடுப்பதற்கு சூப்பர் டிப்ஸ்

nathan

நெற்றியில் சொர சொரப்பை போக்கும் எளிய சிகிச்சை

nathan

நீங்களே பாருங்க.! 60 வயதில் 35 வயது நடிகையை மணந்த இயக்குனர் வேலு பிரபாகரன்.

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான சின்ன.. சின்ன அழகு குறிப்புகள்..

nathan

கொத்தமல்லி அழுகாமல் இருக்க வேண்டுமா?

nathan