நீங்கள் விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் G.M டயட்டை பின்பற்றுங்கள். இந்த டயட் இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமானதும், எடையைக் குறைப்பதில் வேகமானதும் ஆகும்.
அதுமட்டுமின்றி, இந்த புரோகிராம்மை தான் உலகில் உள்ள பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஜி.எம். டயட் புரோகிராமானது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று. இந்த டயட்டின் முக்கியமான நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது தான்.
இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. அதில் சில…
* 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும்
* தொப்பை குறையும்
* சருமம் பொலிவு பெறும்
* உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம்
ஜி.எம். டயட்டை பின்பற்றுவது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருக்கும். குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால் முதல் இரண்டு நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டால், இதர நாட்களையும் எளிதில் பின்பற்றலாம். சரி, இப்போது 7 நாள் பின்பற்ற வேண்டிய ஜி.எம். டயட்டைப் பற்றி பார்ப்போமா…!
============
முதல் நாள்
============
ஜி.எம். டயட்டில் முதல் நாளில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். ஆனால் இதில் வாழைப்பழம், லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சை போன்றவற்றை சேர்க்கக்கூடாது. மாறாக தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். உங்களுக்கு எவ்வளவு பசித்தாலும், பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். என்ன இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை மறக்கக்கூடாது.
=================
இரண்டாம் நாள்
=================
இரண்டாம் நாளில் காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் வேக வைத்த ஒரு உருளைக்கிழங்கை 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும். பின் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையோ சாப்பிட வேண்டும். முக்கியமாக இரண்டாம் நாள் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும். வேண்டுமானால் முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து அதிகம் சாப்பிடலாம். அத்துடன் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
================
மூன்றாம் நாள்
================
மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஆனால் இந்நாளில் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்கக்கூடாது. முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
================
நான்காம் நாள்
================
வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடவும். நான்காம் நாளில் 4 டம்ளர் பால் மற்றும் 6 வாழைப்பழங்களை சாப்பிடலாம். வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் தான். இருப்பினும் ஜி.எம். டயட்டின் போது உடலில் சோடியத்தின் அளவு குறைவதால், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். மேலும் இந்நாளில் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு கொண்டு சுவையாக சூப் செய்து குடிக்கலாம்.
==============
ஐந்தாம் நாள்
==============
ஜி.எம். டயட்டின் ஐந்தாம் நாள் முளைக்கட்டிய பயிர்கள், தக்காளி, பன்னீர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் சிக்கன் அல்லது மீல் மேக்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் ஒரு பௌல் சூப்பும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
==============
ஆறாம் நாள்
==============
இந்நாளன்று ஐந்தாம் நாள் பின்பற்றியது போன்று முளைக்கட்டிய பயிர்கள், காட்டேஜ் சீஸ், சிக்கன், மீல் மேக்கர் மற்றும் இதர காய்கறிகளை சாப்பிடலாம். ஆனால் தக்காளியை சேர்க்கக்கூடாது. வேண்டுமானால் இந்நாளில் சூப் குடிக்கலாம்.
=============
ஏழாம் நாள்
=============
கடைசி நாளன்று நீங்கள் மிகவும் ரிலாக்ஸாக உடல் பருமனின்றி லேசாக இருப்பது போல் உணர்வீர்கள். இந்நாளில் பழச்சாறுகளையும், ஒரு பௌல் சாதம் அல்லது பாதி ரொட்டி மற்றும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்.
==========
=குறிப்பு=
==========
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் குறைந்தது 12-15 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். ஏழாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி அல்லது ஆல்கஹால் குடிக்கக்கூடாது. வேண்டுமெனில் ப்ளாக் டீ, ப்ளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்களுக்கு திருமணம் நெருங்குகிறது என்றால் 2 மாதங்களுக்கு முன்பே இந்த முறையைப் பின்பற்றுங்கள். மேலும் இந்த டயட்டை ஒருமுறை பின்பற்றினால், மீண்டும் இதனை ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் பின்பற்ற வேண்டும்.