cons 12
மருத்துவ குறிப்பு

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! ரொம்ப முக்காதீங்க… இல்லன்னா விறை ப்புத்தன்மை பிரச்சனை வந்துடும்..

தற்போது ஏராளமானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிலும் பல ஆண்கள் ஒரே நேரத்தில் மலச்சிக்கல் மற்றும் விறைப்புத்தன்மை கோளாறால் அவஸ்தைப்படுகின்றனர். இதைப் பார்க்கையில், மலச்சிக்கல் தான் விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறதோ என பலருக்கும் தோன்ற வைக்கிறது. ஆராய்ச்சியாளர்களால் இன்னும் இதற்கான விடையை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், மலச்சிக்கல் தான் விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது என ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆயுர்வேதத்தின் படி விறைப்புத்தன்மை, விந்து வெளியேறுவது, சிறுநீர் கழிப்பது மற்றும் மலத்தை வெளியேற்றுவது போன்ற செயல்களுக்கு அபனா வாயு தான் காரணமாம். உடலில் இந்த அபனா வாயு நிலையாக இருந்தால், மேலே கொடுக்கப்பட்ட அனைத்து செயல்களும் சாதாரணமாக நடைபெறும். ஆனால் இந்த அபனா வாயுவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், , அது உடலியக்கத்தைப் பாதிக்கும்.

அபனா வாயு ஏற்ற இறக்கத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் ஒருவரது உடலில் அபனா வாயு நிலையாக இல்லாமல் இருந்தால், அதனால் விறைப்புத்தன்மை பிரச்சனை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த அபனா வாயுவில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, அஜீரண கோளாறு போன்றவைகள் தான் முக்கிய காரணம்.

செரிமான மண்டல ஆரோக்கியம் அவசியம் ஆயுர்வேதத்தின் படி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. உண்ணும் உணவு நன்கு செரிமானமானால் தான், உடலின் அனைத்து திசுக்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலும் கிடைக்கும். இதில் ஆண்களின் இனப்பெருக்க மண்லத் திசுக்களின் ஆரோக்கியமும் அடங்கும்.

செரிமான மண்டலத்திற்கும், இனப்பெருக்க மண்டலத்திற்கும் என்ன சம்பந்தம்? எப்போது செரிமான மண்டலம் சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது உடல் திசுக்கள் போதிய ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் கிடைக்காமல் போகும். ஒருவரது உடலில் அஜீரண கோளாறின் போது, குறைவான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெற்று, உடலியக்கம் பாதிக்கப்படும். அதில் முதன்மையாக பாதிக்கப்படுவது, இனப்பெருக்க மண்டலம் தான்.

ஊட்டச்சத்து குறைபாடு இனப்பெருக்க மண்டலத்திற்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் போது, விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே செரிமான மண்டலத்தை ஒருவர் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். இங்கு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.cons 12

டிப்ஸ் #1 உண்ணும் உணவுகளில் கவனம் தேவை. ஒவ்வொரு முறை உணவை உண்ணும் போதும், நாம் என்ன சாப்பிடுகிறோம், ஆரோக்கியமான உணவைத் தான் தேர்ந்தெடுத்து உட்கொள்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேப் போல் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் கவனியுங்கள்.

டிப்ஸ் #2 பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு உணவுகளில் இருந்து விலகி இருங்கள். ஏனெனில் இந்த உணவுகளில் உள்ள கெமிக்கல்கள் உள்ளது. இந்த கெமிக்கல்கள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைத்து, உடலில் டாக்ஸின்களின் தேக்கத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ் #3 உண்ணும் உணவுகளில் அதிகளவு இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட ஆரம்பித்து, எண்ணெய் உணவுகளில் இருந்து விலகி இருங்கள். ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். டாக்ஸின்கள் வெளியேறிவிட்டால், உடலின் அனைத்து உறுப்புக்களும் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

டிப்ஸ் #4 விறைப்புத்தன்மை பிரச்சனை அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கலால் ஏற்படுவதால், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட ஆரம்பியுங்கள். குறிப்பாக மலத்தை இறுகச் செய்யும் உணவுகளை அறவே தவிர்த்திடுங்கள். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

டிப்ஸ் #5 உடலில் உள்ள அனைத்து வாயுக்களும் நிலையாக தக்க வைக்கப்படும் போது, செரிமானம் சீராக நடைபெற்று, உடல் அனைத்து உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கி, உறவில் சிறப்பாக ஈடுபட முடியும்.

Related posts

பெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்

nathan

உங்களுக்கு ஆபத்தான நுரையீரல் புற்று நோய் வராமல் அறவே தடுக்கும் ஒரு மூலிகை மசாலா எது தெரியுமா?இதை படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஜாதிக்காய்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி சொல்லிக் கொடுக்க சில வழிகள்!!!

nathan

நோய்களை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் வெந்தயம்

nathan

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது

nathan

நீங்கள் சைனஸால அவதிப்படறீங்களா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவும் உருளைக்கிழங்கு ஜூஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan