29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1577862070
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் நீங்கள் இதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்குமாம்…!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஒருவர் பிறந்த மாதம் அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்தவகையில் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களிடம் சில தனித்துவமான குணங்கள் இருக்கும்.

குறிப்பாக காதல் மற்றும் திருமணத்தை பொறுத்தவரையில் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் இருந்து அதிக வித்தியாசத்துடன் காணப்படுவார்கள். ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களுடன் நீங்கள் உறவில் இருக்கும்போது அவர்களிடம் இருந்து சிலவற்றை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இந்த பதிவில் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

வேடிக்கையானவர்கள்
நீங்கள் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் உங்களை ஒருபோதும் அவர்கள் சோகமாகவோ, கோபமாகவோ இருக்க விடமாட்டார்கள். அவர்களின் கிண்டல், நகைச்சுவை, சரியான நேரத்தில் கூறப்படும் ஜோக்குகள் போன்றவை எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்களின் செயல்களுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகளில் இருந்து சிரிக்காமல் வெளியேறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மனதளவில் குழந்தைகள்
பொதுவாக அனைவரும் வயதைக் கொண்டு முதிர்ச்சி அடைவார்கள், ஆனால் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதற்கு எதிர்மறையானவர்கள். ஆண்டின் முதல் மாதமாக இருப்பதால், அவர்கள் தங்கள் சக மாதங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது வேறு எந்த விதத்திலும் அல்ல ஒரு குழந்தையாக வாழ்க்கையை வாழ்வதன் மூலம்தான். அந்த தருணத்தில் வாழ்வதைத்தான் இவர்கள் விரும்புவார்கள். இந்த குணம் சிலசமயம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் எந்தவொரு தருணத்திலும் இவர்களை மந்தமாக பார்க்க முடியாது.

வெளிப்படையாக இருக்க மாட்டார்கள்
உறவுகள் மற்றும் காதல் என்று வரும்போது, ஜனவரியில் பிறந்தவர்கள் தங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அது உங்கள் உறவின் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருக்கும். எனவே அவர்கள் ஆர்வமற்றவர்கள் என்று நினைத்து நம்பிக்கையை இழக்காதீர்கள். நீங்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து விட்டால் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தினம் தினம் உணர்த்துவார்கள்.

பார்ட்டி பிரியர்கள்
இவர்கள் மனதளவில் குழந்தைகளாக இருக்கலாம், ஆனால் எங்கு பார்ட்டி நடந்தாலும் இவர்கள் அங்கு இருப்பார்கள். ஓரு இறுக்கமான சூழ்நிலையை வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான தருணமாக மாற்ற இவர்களின் இருப்பு அங்கு இருக்க வேண்டியது அவசியமாகும். வாழ்க்கையைப் பற்றிய இவர்களின் அணுகுமுறை அனைவரையும் இவர்களை நோக்கி ஈர்க்கிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு பேரின் கவனத்தை ஈர்த்தாலும், உங்களின் கவனம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.2 1577862070

குறும்புக்காரர்கள்
இவர்களின் குறும்புகள் எப்பொழுதும் ரசிக்குப்படியாக மட்டும் இருக்காது. குறும்புகள் என்று வரும்போது இவர்கள் தங்களுக்கென்று சில விசித்திரமான மற்றும் தனித்துவமான வழிகளை கையாளுவார்கள். இவர்களுடன் காதலில் இருப்பவர்கள் அடிக்கடி ” இந்த பைத்தியத்தை நான் எப்படி காதலித்தேன்? ” என்று கண்டிப்பாக நினைப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் லவ்வர் எதிர்பார்க்கத்தைத்தான் செய்வார்கள்.

தனித்துவமான பார்வை

இவர்களின் அணுகுமுறை மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட ஒருபடி மேலே இருக்கும். ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையின் கருத்துக்களுக்கு எதிர்மறையாகத்தான் இருப்பார்கள் மேலும் அதற்காக விவாதத்திலும் ஈடுபடுவார்கள். அவர்களின் பார்வை சரியென்ற பிடிவாதம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும்.

நல்ல தலைவர்கள்

இவர்கள் மாறுபட்ட கண்ணோட்டத்தால் இவர்களால் இவர்களுக்கு உதவி செய்துகொள்ள முடியாது ஆனால் மற்றவர்களுக்கு இவர்களால் உதவ முடியும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மற்றவர்களுக்கு இவர்களால் சரியாக கூறமுடியும். அவர்கள் உங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் அதுதான் அவர்களின் இயல்பு. ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்கும் போது அனைத்திலும் அவர்களின் கருத்துக்களே மேலோங்கி இருக்கும்.

எல்லாவற்றையும் தாங்களாகவே செய்ய முயற்சிக்கிறார்கள்
ஜனவரியில் பிறந்தவர்கள் சில சமயங்களில் மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ள மிகவும் பிடிவாதமாக இருக்கலாம். நீங்கள் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் அவர்கள் உஙக்ளின் உதவியை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அவர்கள் தங்களை வலிமையான மற்றும் சுயாதீனமானவர்கள் என்பதால் எல்லாவற்றையும் தாங்களாகவே செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சில சமயங்களில் சுமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தவறிலை என்பதை அவர்கள் உணர நேரம் தேவைப்படும்.

Related posts

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! மணி பிளான்ட் வளர்ப்பதால் பணம் பிரச்சனை தீருமா….?

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய் எதுவென்று தெரியுமா ?

nathan

நீங்கள் பெப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களா? அப்போ இந்த குணங்கள் தான் இருக்குமாம்

nathan

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

nathan

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்

nathan