32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
yruryu
அறுசுவைஇனிப்பு வகைகள்

ரசகுல்லா செய்முறை!

தேவையான பொருட்கள்

பால் -1/2 லி
எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி(அ) தயிர் – ¼ கப்
சர்க்கரை – ¾ கப்
தண்ணீர் – 2-/12 கப்

ஏலக்காய் – 2
குங்குமபூ – 2
ஐஸ் கட்டிகள் – 4 அ 5
செய்முறை

அடி கனமான பாத்திரத்தில் பாலை நீர் சேர்க்காமல் ஊற்றி காய்ச்சவும்.

பாலை நன்கு கொதிக்க வைக்கவும். நடு நடுவே கரண்டியினால் ஏடு படியாதவாறு கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவும். பால் நன்கு கொதித்தவுடன் அதில் எலுமிச்சை சாறு (அ) தயிரை சேர்க்கவும்.

பால் திரிந்து நீர் தணியாகவும் பனீர் தனியாகவும் மாற ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் ஐஸ் கட்டிகளை பாலில் சேர்க்கவும். இது மேலும் பனீர் மேலும் வேகாமல் தடுக்க உதவும்.
பின் வடிகட்டியின் மேல் மஸ்லின் துணியையோ (அ) மெலிதான காட்டன் துணியையோ போட்டு வடிகட்ட வேண்டும்.
yruryu

வடிகட்டிய பனீரை ஓடும் நீரில் நன்கு அலசவும். இவ்வாறு செய்வது எலுமிச்சை (அ) தயிரின் புளித்த சுவையை நீக்கும்.
பின் ஈரத்தை பிழிந்து துணியுடன் மூட்டையாகக் கட்டி 20 நிமிடங்கள் மூடி வைத்துவிடவும்.

நீர் முற்றிலும் நீங்கி பனீர் மட்டும் எஞ்சி இருக்கும்.
அதை சுமார் 10 ல் இருந்து 15 நிமிடங்கள் வரை கையினால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அகண்ட மூடியுள்ள பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை போட்டு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நீரை கொதிக்க விடவும். இரண்டு ஏலக்காய்களை முழுதாக நீரில் சேர்த்துவிடவும்.
கொதிக்கும் நீரில் ஒவ்வொன்றாக பனீர் உருண்டைகளை போட்டு தட்டால் மூடிவிடவும். பனீர் உருண்டைகளை போடும் முன் ஏலக்காய்களை எடுத்துவிடவும். ஏலக்காயின் மணமும் ருசியும் நீரில் கலந்து விட்டிருக்கும்.

கடைசி வரை தீ சீரான, மிதமான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

சுமார் 10 ல் இருந்து 15 நிமிடங்கள் வரை சீரான சூட்டில் சர்க்கரை நீர் பனீர் உருண்டைகளுடன் கொதிக்க வேண்டும்.
நடு நடுவே இரண்டு மூன்று முறை மட்டும் மிருதுவாக உருண்டைகளை கலக்கி விடவும்.

பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆறும் வரை மூடியே வைத்திருக்கவும்.

இப்போது மிருதுவான ரசகுல்லா ரெடி. பாத்திரத்தில் இருந்து கப்பில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து, ஜீரா நீரையும் ஊற்றி, மேலே குங்குமப் பூ ஒன்றிரண்டாக தூவி அலங்கரிக்கவும்.

ரசகுல்லாவை ஆறிய நிலையிலோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவோ சாப்பிடலாம்.

Related posts

சுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை

nathan

சோன் பப்டி தீபாவளி ரெசிபி

nathan

பூசணி விதை பாதாம் பர்பி

nathan

பீட்ருட் வெல்ல அடை… பிரமாத சுவை! வாசகிகள் கைமணம்!!

nathan

தினை அதிரசம்

nathan

தீபாவளி சூப்பரான சோன்பப்டி

nathan

மிக்க சுவையான எள்ளு உருண்டை

sangika

மாம்பழ அல்வா : செய்முறைகளுடன்…!

nathan