பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை.
போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம். நீண்ட கூந்தலை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
* நீண்ட கூந்தலை உடையவர்கள் பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.
* ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.
* கழுத்து குட்டையாக இருப்பவர்கள் முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போட்டால் அழகாக இருக்கும்.
* நீளக் கழுத்து உள்ளவர்கள் காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.
* மீடியம் கழுத்து உள்ளவர்கள் பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.
* மிக நீண்ட கழுத்து உள்ளவர்கள் கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.
* உருண்டை முகம் உடையவர்கள் உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
* சதுரமுகம் உடையவர்கள் தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.
* குண்டாக இருப்பவர்கள் கொண்டை போட்டால் நன்றாக இருக்காது. பின்னல் போட்டால் அழகாக இருக்கும்..
* எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும்.