29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்

கோடையில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 4 வழிகள்
கோடை காலத்தில் பெண்களின் சரும பராமரிப்பிற்கு உதவும் 5 வழிகள் பெண்களின் அழகு கூடுவதில் சரும பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தனது அழகை பாதுகாக்க சருமத்தையும் கவனமுடன் பராமரிக்க வேண்டும்.இந்த கோடை காலத்தில் சருமத்தை அதிகம் பாதிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டால் முகம் மற்றும் உடல் நலத்தை பாதுகாக்கலாம். அதற்கான ஆச்சரியமளிக்கும் 5 விசயங்கள் குறித்து பார்ப்போம்.1. சாக்லேட் பேசியல் செய்வது சருமத்திற்கு நல்லது. அதில் உள்ள கோகோ என்ற பொருள் சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பணியாற்றுகிறது. பெரும்பாலான அழகு நிலையங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோலில் ஈரப்பதத்தை நிலைக்க செய்து அதனை மென்மையாக மாற்றுகிறது. எனினும், சிலருக்கு இது ஒத்து கொள்வதில்லை. ஏனென்றால், சாக்லேட் பொருளில் காணப்படும் வெண்ணெய் அளவு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம். எனவே, அதிகமாக பயன்படுத்தாமல் அளவாக வைத்து கொள்வது நன்மை தரும். அல்லது சாதாரண சாக்லேட்டுக்கு மாற்றாக கறுப்பு சாக்லேட்டை பயன்படுத்தலாம்.

2. சருமத்திற்கு தேவையான புரத சத்தில் ஒன்று கொலாஜன். இதனை உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் சி பயன்படுகிறது. அதிக அளவு கொலாஜன் உற்பத்தி மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வைட்டமின் சி ஸ்ட்ராபெரியில் அதிகம் காணப்படுகிறது. அதனுடன், ஸ்ட்ராபெரி எல்லாஜிக் என்ற அமிலம் உள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தில் இருந்து தீங்கு ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கும் பணியினை எல்லாஜிக் அமிலம் மேற்கொள்கிறது. தோல் விரைவில் வயதான தோற்றத்தை தருதல் மற்றும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை தடுக்கும் பணியையும் செய்வதால் ஸ்ட்ராபெரி சரும பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. எலுமிச்சை பழச்சாறு இயற்கை அளித்துள்ள கொடையாக விளங்குகிறது. இது சருமத்தை தூய்மையாக வைத்து கொள்ள உதவுவதுடன் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. இதனை நாம் தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். அதனால், சருமம் புத்துணர்ச்சியுடனும், தூய்மையாகவும் காணப்படும். சந்தையில் விற்கப்படும் முக பொலிவு சாதனங்களை விட மிக நன்றாக சரும பாதுகாப்பினை அளிக்க கூடியது. சருமத்தை தூய்மை செய்வதற்கு உதவும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சையில் அதிகம் உள்ளது. இது இறந்த செல்களை நீக்கிடவும் உதவுகிறது. அதனுடன், சருமத்தில் ஏற்படும் துளைகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

4. சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.  இந்த எண்ணெயில் ஆன்டியாக்சிடண்டுகள் நிறைந்து உளளன. வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ ஆகியவை இதில் அதிகம் உள்ளன. இதனால், வேறு கிரீம்கள் உதவுவதை விட இந்த எண்ணெயை தொடர்ந்து இரு தினங்கள் பயன்படுத்துவதால் கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையங்கள் மறைவதை நாம் கண்டறியலாம். இது சருமத்தை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. இரவு நேரங்களில் உபயோகிக்கும் கிரீம்களை விட இது சிறந்த ஒன்றாக இருக்கும். அழகுக்கு போட்டு கொள்ளும் மேக் அப்பை நீக்குவதற்கு சிறந்த ஒன்றாகவும் ஆலிவ் எண்ணெய் விளங்குகிறது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ப்யூட்டி பார்லருக்கே போகாமல் அழகை எப்படி அதிகரிக்கலாம் ?

nathan

தளும்புகள் ஏற்பட்டு விட்டால் இதை செய்யுங்கள்…

sangika

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள்

nathan

அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு திறமையா? ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்:

nathan

சூப்பர் டிப்ஸ் கைகளில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்ய அழகு குறிப்புகள்….!

nathan

பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா? இதோ சில வழிகள்!

nathan

சூரியகாந்தி எண்ணெயை தோல், முடி மற்றும் சருமத்திற்கு 11 சிறந்த நன்மைகள்

nathan

மார்பக அழகைப் பராமரிக்க யோசனைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan