25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
brush
அழகு குறிப்புகள்

உங்களுக்கு கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. இதை முயன்று பாருங்கள்…

எப்போதும் அனைவரின் பார்வையும் தங்கள் மீதும் தங்கள் தோற்றத்தின் மீதும் தவழ வேண்டும் என்பது பெண்களின் விருப்பமாகும். தங்கள் மனம் கவர்ந்த ஆணின் பார்வையை மட்டும் தவற விட்டுவிடுவரா?

அதிலும் மனம் கவர்ந்த ஆண், தன் பார்வையை உங்கள் மீது செலுத்தவில்லை என்பதில் எரிச்சலடைந்துள்ளீர்களா? அல்லது உங்கள் வாழ்க்கை துணைவர் உங்கள் தோற்றத்தை புகழ்வதை நிறுத்தி விட்டாரா? அப்படியெனில் உங்கள் சிறந்த விஷயங்களை சேர்த்து, உங்கள் வாழ்வை மெருகூட்டுவதற்கான நேரம் இதுவே! உங்களவரின் பார்வையை கவர இதோ இந்த குறிப்புகளை படித்து பலன் பெறுங்கள்!

கரிய விழிகள்

பெண்களின் கரிய விழிகளின் செக்ஸியான ரகசிய பார்வையை விட, ஆண்களை சூடேற்றும் விஷயம் வேறொன்றுமில்லை. புகை போன்ற கரிய விழிகளை பெற நமக்கு தேவைப்படுவது கோல் பென்சில் மற்றும் மஸ்காரா மட்டுமே. கோல் பென்சிலை பயன்படுத்தும் முன் அதனை நீரில் நனைத்து கொள்ள வேண்டும் .பின் கண்களின் கீழாக கோல் பென்சிலை பயன்படுத்த வேண்டும். இது கோல் பென்சிலின் கருப்பு மையை அதிகப்படுத்தி, கண்ணின் பிரகாசத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் தேவையான சிறந்த அளவிலான மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ஒட்டு மொத்த விளைவும் நுட்பமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் இது உங்கள் கண்ணுக்கு அழகூட்டுவதற்கு பதிலாக உங்கள் கண்ணை இருள் சூழ்ந்த பகுதியாக மாற்றி விட கூடும். எனவே உங்களவரை சந்திக்க செல்லும் முன், உங்கள் விழிகளை அழகுப்படுத்துவதில் நேர்த்தியான பயிற்சி பெறுங்கள்.

ஈரப்பதமான உதடுகள்

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தனது பார்வையை செலுத்தும் விஷயங்களில் முதலிடம் பெறுவது அவளது அழகான ஒரு ஜோடி உதடுகள். உங்களது அழகான ஒரு ஜோடி உதடுகள், நீங்கள் பேசும் போதும், சிரிக்கும் போதும், அந்த அழகான உதடு செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஆணை வசீகரிக்கும். உங்கள் சரும டோனுக்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கவல்ல உதட்டு சாயத்தையோ அல்லது உதட்டு பளபளப்பூட்டியையோ பயன்படுத்தி, அவரின் பார்வையை உங்கள் மீது பதிக்க செய்து, உங்கள் முத்து போன்ற பற்களை பளபளப்புடன் கூடிய ஒளியுடன் மின்னும்படி செய்து, புன்னகை புரியுங்கள். உங்கள் சரும டோனுடன் பொருந்தி போகிற உதட்டு சாய ஷேடை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். மேலும் உங்களது உதட்டு சாய ஷேடை அதிக பகட்டுடன் கூடியவாறு பளபளப்பாக தோன்ற விடாதீர்கள்.brush

இளஞ்சிவப்பு நிற கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறத்தின் மீதான பெண்களின் ஆர்வம் ததும்பும் நிலைபாடு குறித்து, ஆண்கள் முடிவில்லாமல் புகார் செய்யலாம். அந்த அளவிற்கு பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தின் மீதான ஆர்வம் அதிகம். எனினும் மேக்-அப் என்று வரும் போது இளஞ்சிவப்பு நிறம் பெண்களுக்கு பாதுகாப்பு தூண்டிலாக செயல்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்தை எங்கே எப்படி பயன்படுத்துவது பெண்கள் அனைவரும் நன்கு அறிந்ததே! பெண்கள் தங்கள் கன்னத்தின் மீது பூசுகின்ற இளஞ்சிவப்பு நிறம் புகழதக்கது. எனினும் அதிகப்படியான இளஞ்சிவப்பு நிறத்தை பூச வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் மேக்-அப்பை கஷ்டப்பட்டு சுமந்து செல்லும் ராணி போல தோற்றம் பெறுவீர்கள். எனவே நீங்கள் முகத்தை சிறந்த பவுண்டஷன் கொண்டு டச் அப் செய்து கொள்ளுங்கள். பின் முகத்தில் உள்ள வடுக்களையும், கறைகளையும் கன்சீலர் கொண்டு மறையுங்கள். இறுதியில் ரோஸ் பவுடரை பயன்படுத்துங்கள்.

சிறந்த கேசம் தங்கள் தலைமுடியுடன் ஆண்களின் விரல்கள் விளையாடுவதை அனைத்து பெண்களுமே விரும்புவார்கள். நீங்கள் மென்மையான, பளபளக்கும் ஒளி வீசும் துள்ளலுடன் கூடிய, வாசனை மிகுந்த கேசத்தை பெற்றவர் எனில் ஆண்கள் உங்கள் கூந்தலுடன் விளையாடுவதை தவிர்க்க முடியாது. ஆகவே சிறந்த கேசத்தை பெற ஆரோக்கிய குணநலன்கள் நிறைந்த ஷாம்புவையும், கண்டிஷனரையும் பயன்படுத்த வேண்டும். கண் இமைக்காத அவரது பார்வையை உங்களது ஆசையுடன் கூடிய அன்பு சிறை மட்டுமே திருப்தி அடைய செய்ய முடியும்.

ஆரோக்கியமான நகங்கள் கை நகங்களையும், கால் நகங்களையும், அதிகம் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பராமரித்தும், அடுத்தவர் பார்வையில் அவை கவனிக்கப்படாமல் போய் நேரமும் பணமும் வீணாகிறதே என்ற எண்ணம் கொண்டவராயின், உங்கள் எண்ணத்தை விட்டொழியுங்கள். நன்கு பராமரிக்கப்பட்ட நீளமான நகங்கள் பெண்ணிற்கு நேர்த்தியுடன் கூடிய சிறந்த அழகை வழங்குகின்றன. நீங்கள் அந்த அழகிய நகங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சரும டோனுக்கு ஏற்றபடி சிறந்த நெயில் பாலிஷ் ஷேடை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அனைவரின் புதிய விருப்பமான நக பராமரிப்பு கலை, ஆண்களின் பார்வையை தன் வசம் ஈர்க்க தவறுவதில்லை. எனவே உங்கள் கை அசைவுகளின் அழகான நேர்த்தியான வேலைகளின் மூலம், அவற்றை சிறந்த முறையில் பராமரித்து, அவற்றை அனைவரின் பார்வைக்கு பகட்டாக வெளிப்படுத்துங்கள்.

மென்மையான சருமம் தொடுவுணர்வு ஆண்களின் தீர்மானிக்கும் விஷயத்தில் வலிமையான காரணி ஆகும். உங்கள் கைகள் மற்றும் கால்களில் வேக்ஸ் செய்வதை வழக்கமாக கொண்டிருங்கள். குளியலுக்கு பிறகு சிறந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்திற்கு மென்மையையும் ஆரோக்கியதுடன் கூடிய பொலிவையும் வழங்குகிறது. அடுத்த முறை அவரது காபி கோப்பையை வழுவழுப்பான உங்கள் கரம் தட்டட்டும் (பாலிவுட் பட ஸ்டைல்) அவரை நெருங்கி உங்கள் சருமத்தின் மென்மையை உணர செய்து அவரது பார்வையை உங்கள் வசம் கவருங்கள்.

புத்துணர்வான சுவாசம் உங்களவரை முத்தமிடும் போது, அவரை புகையிலை வாசனையை முகர செய்து வெறுப்பூட்டுபவராயின், ஆண்களுக்கும் வாசனை உணர் திறன் உண்டு என்பதை தெரித்து கொள்ளுங்கள். நீங்கள் அவரை முத்தமிடும் போது மதிய உணவிலோ அல்லது இரவு உணவிலோ நீங்கள் சாப்பிட்டது என்ன என்று அவர் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. எனவே பெப்பர்மின்ட் ஸ்ப்ரே மற்றும் பல் குத்தும் குச்சிகளை உங்களுடன் எப்போதும் எடுத்து செல்லுங்கள். அவற்றை உபயோகியுங்கள். உங்கள் பற்களின் இடுக்குகளில் சிப்ஸ் மற்றும் அரிசி துணுக்குகள் தங்கி விட அனுமதிக்காதீர்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உங்கள் வாயை உலர விடாதீர்கள். சுவாசத்தை புத்துணர்வாக வைத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு காலையிலும் மவுத்வாஷ் பயன்படுத்தி உங்கள் வாயை அலசுங்கள்.

சிறந்த அணிகலன்கள் சிறந்த அணிகலன்களை தேர்ந்தெடுத்து அணிவது முக்கியமான ஒன்றாகும். சிறிய கருப்பு நிற ஆடைகளை அணிந்து கொண்டு அதனுடன் பொருந்தாத ஏதோ ஒரு அணிகலன்களை அணிந்து பப்பி லஹாரியின் நெருங்கிய உறவினர் போல தோற்றம் தருவது சிறந்தது அல்ல. நீங்கள் தேவையற்ற அணிகலன்களுக்கு முன்னுரிமை அளிப்பவராக இருக்கலாம். ஆனால் அவற்றை அணிவதன் மூலம் சிறந்த தோற்றத்தை பெற்று விட முடியாது. அளவுக்கு அதிகமான நகைகளை அணிவதை தவிருங்கள். அது உங்கள் ஓட்டு மொத்த தோற்றத்தையும் பாதிக்கும் நீங்கள் அணிந்துள்ள ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிகலன்களை தேர்வு செய்து அணிந்து சிறந்த தோற்றத்தை பெறுங்கள்.

கவர்ச்சியான ஹீல்ஸ் காலணிகள் ஹீல்ஸ் காலணிகள் உங்களை கவர்ச்சியாக உணர வைப்பது மட்டுமன்றி கவர்ச்சியாகவும் தோன்ற செய்கிறது. ஹீல்ஸ் காலணிகள் உங்கள் கால்களை நீளமாக தோற்றமளிக்க செய்கின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வையை விளக்க முடியாத தோற்றம் கொண்டம் ஆண்கள் நீளமான கால்களை கொண்டதினாலேயே கவர்ச்சியாக தோன்றுக்கின்றனர். நீங்கள் ஹீல்ஸ் காலணிகளை அணியும் போது அவை உங்களை அதிக நம்பிக்கை கொண்டவராக நடமாட செய்கிறது. மேலும் நீங்கள் உங்களவரை அணுகும் போது உங்கள் நம்பிக்கைக்கு அதிக ஊக்கத்தை வழங்கக்கூடிய காரணியாகவும் ஹீல்ஸ் காலணிகள் செயல்படலாம்.

சிறந்த வாசனை நாள் முழுவதும் வேலை செய்த சோர்வினாலும் அல்லது உங்கள் குழந்தை அங்கிங்கு ஓடுவதை தவிர்க்கும் பொருட்டு நீங்கள் ஓடியதாலோ ஏற்பட்ட சோர்வினாலும், உங்களிடம் வியர்வை மணம் வீசலாம். எனினும் எப்போதும் புத்துணர்வு மணத்துடன் இருங்கள். ஆண் கவனிக்கும் விஷயங்களில் இதற்கு முதலிடம் இல்லை. எனினும், நாள் முழுவதும் வேலை செய்ததினால் ஏற்பட்டுள்ள அழுக்கு வாசனையின் காரணமாக உங்களவரை ஏன் உங்களிடமிருந்து விலக வைக்கிறீர்கள்? உங்களுக்கு விருப்பமான டியோடரண்ட்டை உங்களுடன் எடுத்து செல்லுங்கள். இந்தியா போன்ற தட்பவெப்பம் நிலவும் பகுதிகளில் வியர்வை எதிர்ப்பு பொருளை உடன் எடுத்து செல்வது அவசியமாகும். அடுத்த முறை உங்களவர் உங்களை கடந்து செல்லும் போது, உங்களிடமிருந்து வரும் இனிய மலர் மற்றும் கஸ்தூரி மணத்தினை அவர் நுகரட்டும். தனது இரண்டாவது பார்வையை உங்கள் மீது அவர் பரவ விடுவதிலிருந்து தப்ப முடியாது.

Related posts

உட்காரும் இடத்தில் பருக்கள் உண்டாக இவை தான் காரணம்!…

sangika

பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், நம் உடல் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம்….

sangika

வாடகைத்தாய் சர்ச்சை விவகாரம்..விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் பதிவு!

nathan

இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை தான், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் !

nathan

கைகள் பராமரிப்பிற்கு சில டிப்ஸ் கள் இதோ…

sangika

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika

சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த வங்கி அதிகாரி -மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை…

nathan

கொத்தமல்லி இலை முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது.

nathan

நம்ப முடியலையே…5 நடிகைகளுடன் சர்ச்சைக்குரிய தொடர்பில் கமல்ஹாசன்.. யாரை திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?

nathan