27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
571039274
மருத்துவ குறிப்பு

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

ஆயுர்வேத முறையின் படி, ஒருவரது உடல் எடை இழப்பு என்பது உடல் வகையான வாதம், பித்தம் அல்லது கபத்தைப் பொறுத்தது. அதில் வாத வகையை சேர்த்தவர்கள் உடல் எடை குறைவு பிரச்சனையை சந்திப்பார்கள். ஏனெனில் இவர்களது செரிமான சக்தியானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. பித்த வகையை சேர்ந்தவர்கள் சற்று குண்டாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் அதிகமாக சாப்பிட்டால், பூசணிக்காய் போன்று விரைவில் வீங்கிவிடுவார்கள். வாதம் வகையை சேர்ந்தவர்கள், எளிதில் உடல் எடையை அதிகரிக்கக்கூடியவர்களாக இருப்பர்.

இப்போது கேரள ஆயுர்வேத முறை கூறும் சில உடல் எடை இழப்பிற்கான சில வழிகளைக் காண்போம். அவற்றைப் படித்து மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் வேகமாக எடையைக் குறைக்கலாம்.

வழி #1 உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தங்களின் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவில் அடிக்கடி பாகற்காயை சேர்க்க வேண்டும். குறிப்பாக தினமும் பாகற்காயை சாப்பிட்டால், எதிர்பார்த்த நல்ல பலனைப் பெறலாம்.

வழி #2 நார்ச்சத்துள்ள பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. இந்த பழங்கள் நம் வயிற்றை நிரப்புவதோடு, ஆரோக்கியமான உணவு வளர்சிதை மாற்றத்துக்கு உதவும். எனவே தினமும் ஒரு நார்ச்சத்துள்ள பழத்தை மறக்காமல் சாப்பிடுங்கள்.

வழி #3 உடல் எடையைக் குறைக்க நீர் பெரிதும் உதவியாக இருக்கும். நீரை அதிகம் குடிப்பதால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வழி செய்யும். இதன் விளைவாக உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும்

வழி #5 இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு ஒருமுறை திரிபலா சூரணத்தை லேசான மளமிளக்கியாக பயன்படுத்தவும். இதனால் உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டுவிடும். இந்த கழிவுகள் திசுக்களுக்கிடையே நடைபெறும் ஊட்டச்சத்து பரிமாற்றங்களைத் தடுக்கக்கூடியவை. மேலும் இந்த கழிவுகள் உடலில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஒருவர் பட்டினி இருந்தால் கூட, உடல் எடையைக் குறைக்க முடியாமல் தடுக்கும்.
571039274
வழி #6 இரத்தம் மற்றும் உடலை சுத்தம் செய்யும் பொருட்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அந்த பொருட்களாவன மஞ்சள், வேப்பிலை, இஞ்சி, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் போன்றவை. இந்த பொருட்களை எந்த வடிவில் வேண்டுமானாலும் ஒருவர் உட்கொள்ளலாம்.

வழி #7 உடல் எடையைக் குறைக்க நற்பதமான நெல்லிக்காய் அல்லது நெல்லி பொடியை உட்கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. அதுவும் நெல்லிக்காயை பச்சையாகவோ அல்லது ஜூஸாக தயாரித்தோ குடிக்கலாம். இல்லாவிட்டால், நெல்லிப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து உட்கொள்ளலாம்.

வழி #8 உடல் எடையைக் குறைக்க நினைத்தால் தினமும் அதிகாலையில் அரை மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நீச்சல் தெரிந்தால், அதன் மூலம் இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம். இல்லாவிட்டால், பேட்மிண்டன், ரன்னிங், சைக்கிளிங் போன்றவற்றை கூட மேற்கொள்ளலாம். இவை எதுவும் செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள், வெறும் நடைப்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது

வழி #9 அன்றாடம் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இதனால் உடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு, மெட்டபாலிசம் அதிகமாக தூண்டப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும்.

வழி #10 எடையைக் குறைக்க வேண்டுமாயின், சாதம், சர்க்கரை மற்றும் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும். மாறாக பச்சை காய்கறிகள், ப்ராக்கோலி, லெட்யூஸ், பச்சை பட்டாணி, பீன்ஸ், பசலைக்கீரை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

வழி #11 எடையைக் குறைப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம். எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. அதிலும் காலை உணவாக பழங்களை எடுத்துக் கொள்வது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும். ஆனால் எப்போதும் காலை வேளையில் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

வழி #12 உடல் எடையைக் குறைக்க பட்டினி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேப் போல் தினமும் 2-3 வேளை அதிகளவு உணவு உண்பதற்கு பதிலாக, 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை லேசான உணவு உட்கொள்ளுங்கள். இதன் மூலம் நிச்சயம் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
உடல்

Related posts

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் – தெரிஞ்சிக்கங்க…

nathan

நிக்கோட்டின் சூயிங் கம் மெல்லுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

நாவூறும் யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்!!!

nathan

உஷாரா இருங்க! சிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறி தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் ஏன் பொட்டாசிய சத்து மிகவும் அவசியம் என தெரியுமா?

nathan

நம்மை காக்கும் இம்யூனிட்டி! – ஹெல்த்தி வழிகாட்டி

nathan

உங்களுக்கு தெரியுமா காலை எழுந்ததும் இந்த பானத்தை குடித்தால் நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

nathan

உங்க நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற சூப்பர் டிப்ஸ்….

nathan

உங்களுக்கு தெரியுமா கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட 5 வழி முறைகள்

nathan