26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
18779347df0456fea2c04b2c7fb0d1037402dd65380995646156289026
சமையல் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது?

நாம் சாப்பிடும் உணவு முதல் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் வரை என அனைத்திற்கும் பயன்படும் ஒரு பொருள் தேங்காய் எண்ணெயாகும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.

சில வகை உணவுகளை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் சமையல் எண்ணெய் மிகவும் அவசியமாகிறது. சமையல் எண்ணெய் பல வகையான உணவு பொருட்களில் இருந்து எடுக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அதற்காக இந்த எண்ணெய் அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும் என்று கூற முடியாது. தேங்காய் எண்ணெயாலும் ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது.

18779347df0456fea2c04b2c7fb0d1037402dd65380995646156289026

தேங்காய் எண்ணெயின் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் :

பழங்காலத்தில் இருந்து வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் ஆயில் புல்லிங் முறை பின்பற்றப்பட்டு வருகிறது

ஆனால் ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது.

மாறாக நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்தால், அது வாயில் உள்ள பாக்டீரியாக்களை வேகமாகக் குறைக்கும்.

முகப்பரு, பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகும். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது.

ஆனால் அது சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இல்லாதவர்களுக்கு மட்டுமே. இல்லையெனில் இது நிச்சயம் பிரச்சனையை ஏற்படுத்தும்.

வெட்டுக் காயங்கள் குணமாவதற்கு பலரும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவோம். ஆனால், வெட்டு ஏற்பட்ட உடனேயே தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.

ஆகவே உடனே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காயம் ஆறும் நிலையில் தேங்காய் எண்ணெயை உபயோகித்தால் விரைவில் காயம் ஆறிவிடும்.

குழந்தைக்கு ஹைப்போ தைராய்டு என்றால் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் சில குழந்தைகளுக்கு இது கடுமையான அலர்ஜியை ஏற்படுத்தும்.

உணவுகளை பொரிக்க செய்வதற்கு தூய்மையாக்கப்படாத தேங்காய் எண்ணெயைக் கொண்டு பொரிக்காதீர்கள். நன்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டு உணவுப் பொருட்களை பொரிக்க செய்வதே சிறந்தது.

Related posts

உருளைக்கிழங்கு மசால் தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி?….

sangika

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

சுவையான மிளகு அவல்

nathan

சுவையான மிளகூட்டல்!…

sangika

மலபார் மட்டன் ரோஸ்ட்

nathan

சுவையான பன்னீர் கட்லெட்….

sangika

முட்டை ஆம்லெட் குழம்பு

nathan

நாவூறும் ருசியான தொக்கு செய்யலாம்! வெறும் வெங்காயம், தக்காளி போதும்!

nathan

பாலக் டோஃபு கிரேவி ருசி தெரியுமா உங்களுக்கு…..

sangika