உடல் அதிக எடை இருப்பவர்கள் பெரிதும் கஷ்டப்படுவது இடுப்பு சுற்றளவை குறைக்க தான் என்பது அனைவரும் அறிந்ததுதான். காரணம் இடுப்பு அளவு அதிகம் இருந்தால் எந்த ஆடையும் அணிய முடியமால் அவதிப்படுவதுண்டு.
இதற்கு ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி இயற்கையான முறையில் இடுப்பு சுற்றளவை எளிதில் குறைக்க முடியும்.
இதற்கு எலுமிச்சையும் தேனும் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது இந்தப்பொருட்களை வைத்து எப்படி இடுப்பு சுற்றளவு எப்படி குறைக்கலாம் என்று பார்ப்போம.
தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 125 கிராம், எலுமிச்சையின் தோல் – 3, தேன் – 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எலுமிச்சை பழங்களை நன்கு கழுவி பாதியாக அறுத்துக் கொள்ளவும். பிறகு அதிலிற்கும் விதைகளை நீக்கிவிட்டு, முள்ளங்கி உடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
நன்கு அரைத்த முள்ளங்கி மற்றும் எலுமிச்சை தோல் கலவையுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தூய்மையான தேனை சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த கலவை கிரீம் போன்று இருக்கும், இதை ஓர் ஜாடியில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த க்ரீமை ஒரே டீஸ்பூன் அளவு உணவிற்கு முன்னர் இரண்டு வேளை சாப்பிட்டு வர வேண்டும்.
மூன்று வாரங்களில் நீங்கள் இதை பின்பற்றி வந்தால் உங்கள் உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவில் நல்ல மாற்றம் காண முடியும். இந்த கிரீம் உடல் எடை, இடுப்பு சுற்றளவு குறைக்க மட்டுமின்றி. உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும், மூளையின் செயற்திறனை ஊக்குவிக்கவும் பயனளிக்கிறது.
மேலும், இந்த கிரீமை தினமும் சாப்பிட்டு வருவதால் கண்பார்வை குறைபாடு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு போன்றவை சீராகும்.