26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
எடை குறைய

எடையை குறைக்க எட்டே வழிகள்,

மெலிந்த-உடல்-குண்டாக-300x168

காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்களா, அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எழுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,

3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது.

 

நம் அன்றாட வேலைகளை செய்யவும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

இவ்வாறு இந்த சேமிப்பு ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம்.

மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் அதிகரிக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி.

தினசரி கடைபிடிக்க வேண்டய உணவு முறைகள்:

1. காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2. குறைந்தது, 35 நிமிடம் உடற் பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3. அப்போத தயாரித்த வெண் பூசணிச் சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)

4. காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்ககரையைத் தவிர்ப்பது நல்லது.

5. காலை சிற்றுண்டி (8.00 – 9.00 மணிக்குள்): வெண்ணெய எடுத்த மோர் – 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.

6. மதிய உணவு (12.00 – 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7.00 – 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.

8. பகலில் உறங்குவதை தவிர்ததல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க செல்லவும்.

‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது

Related posts

மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!

nathan

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்

nathan

தொடையில் உள்ள அதிக சதைகளை குறைக்க எளிய வழி

nathan

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்கலாம்

nathan

உடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜீஸ் போதும்!இதை முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறை

nathan

அம்மாக்கள் எடை குறைக்க…

nathan

2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

nathan

பெண்களே…. குனிந்து பார்க்க முடியாதவாறு தொப்பை வந்துவிட்டதா? கட கடனு குறைக்க இவற்றை எல்லாம் இனி விடாமல் சாப்பிடுங்க…!

nathan