23.8 C
Chennai
Thursday, Dec 26, 2024
bgvnbv
அழகு குறிப்புகள்

அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க. எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா

சருமத்தை ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்றவாறு பாதுகாக்க வேண்டித்துள்ளதால், சந்தைகளில் விற்கப்படும் பல விலையுயர்ந்த பொருட்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நம் அனைவரும் நமது கிட்சனில் இருக்கும் பொருட்களைப் பற்றி மறந்து விடுகிறோம். எனவே நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்காக பேஷன் நிருபர் ஒரு சில அழகுக் குறிப்புகளை வழங்கியுள்ளார். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

அரிசி மாவு

உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்த வேண்டியது அரிசி மாவு தான். அரிசி மாவு உங்கள் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கவும் முகத்தினை ஸ்க்ரப் செய்வதற்கும் உதவுகிறது. அரிசி மாவு உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யக் கூடிய தேவையான மூலப்பொருட்களைக் கொண்டுள்ளன.

நீங்கள் சந்தைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறையாவது அரிசி மாவினை உங்கள் முகத்தில் அப்ளை செய்து பாருங்கள் பின்பு எந்தவிதமான விலையுயர்ந்த பொருட்களையும் விலை கொடுத்து வாங்கமாட்டீர்கள் என்கின்றனர். அரிசி மாவு முகத்தினை இளமையாக வைக்க உதவும் என்று ஜப்பானியர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
bgvnbv

பயன்படுத்தும் முறை

அரிசி மாவினை தண்ணீருடன் கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து அரிசி மாவு காய்வதற்கு முன்பு கழுவுவதால் எப்போதும் இளமையான சருமத்தைப் பெறலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இளமையான சருமம்

அரிசி மாவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி முகத்தினை புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்து இருக்க உதவுகிறது. அத்துடன் அரிசி மாவு உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் மற்றும் மென்மையானதாகவும் மாற்றுகிறது. அரிசி மாவினை சருமத்தில் மாஸ்க்காகப் போடும்போது சருமத்தினை எஸ்ப்ளாய்டு செய்து ஒளிரும் மற்றும் பளபளக்கும் சருமத்தினை உங்களுக்குத் தருகிறது.

பயன்கள்

அரிசி மாவு மாஸ்க் உங்கள் சருமத்தை வெயிலின் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

சருமத்தினை ஈரப்பதத்துடன் வைக்கிறது.

உங்கள் சருமத்தினை பளபளக்கச் செய்ய உதவுகிறது.

சருமத்தினை எக்ஸ்ப்ளாய்டு செய்து இறந்த செல்களை அகற்றுகிறது.

குறைந்த வயதில் ஏற்படும் வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது. எனவே அரிசிமாவு மாஸ்க்கை உபயோகித்துப் பொலிவான மற்றும் ஒளிரும் சருமத்தினை பெற்றிடுங்கள்.

Related posts

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

நீங்களே பேசியல் செய்யுங்கள்.!பியூட்டி பார்லருக்கு GOOD BYE

nathan

தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்கரப் செய்ய 2 எளிய வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா மது குடிப்பது, உடல் உறுப்புக்களை எந்த அளவிற்கு சீர்குலைக்கிறது?

nathan

63 வயதில் 6 வது முறையாக மனைவியை கர்ப்பமாக்கிய நடிகர்!

nathan

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

nathan

முடி உதிர்தலை எதிர்த்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயற்கை வைத்தியம்

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan