அழகு குறிப்புகள்

எலுமிச்சை ப்ளீச்சிங் இப்படி யூஸ் பண்ணுங்க. அக்குள் கருமை காணாம போயிடும்!

இப்போது அக்குளில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகளையும், இதர சில எளிய இயற்கை வழிகள் குறித்து காண்போம்.

அதைப் படித்து பின்பற்றி, உங்கள் அக்குளை வெள்ளையாக்குங்கள். முக்கியமாக இந்த வழிகளைப் பின்பற்றினால் 10 நாட்களில் அக்குள் கருமையைப் போக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சை ப்ளீச்சிங் பொருள் போன்று செயல்படுவதோடு, இது சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருளையும் கொண்டது. அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அக்குளை வெள்ளையாக்குவதற்கு, எலுமிச்சையை வெட்டி, அதன் துண்டை அக்குளில் சில நிமிடங்கள் தேயுங்கள். பின் 10 நிமிடம் கழித்து, நீரால் கழுவுங்கள்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இந்த செயலாலும் அக்குள் கருமை அகலும்.
ghfdjgdhj

எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், அக்குள் கருமை விரைவில் நீங்கி, ஒரு நல்ல பலன் கிடைப்பதைக் காணலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் நீங்கா கருமையையும் எளிதில் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, சில நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால், சீக்கிரம் அக்குள் கருமை நீங்கும்.

சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்
கருப்பாக காட்டும் அக்குளில் உள்ள இறந்த செல்களைப் போக்க சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை நல்ல பலனைத் தரும். அதற்கு 1 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி சில நிமிடங்கள் ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் பண்பு நிறைந்த ஒரு பொருள். இது சருமத்தில் இருக்கும் எப்பேற்பட்ட கருமையையும் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி அக்குளில் தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சீக்கிரம் அக்குள் கருமை அகலும்.

தேன்
தேன் பல்வேறு ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகளை உள்ளடக்கியது. முக்கியமாக தேன் அக்குள் கருமையை விரைவில் போக்கும். அதற்கு தேனி அக்குளில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், தேனை, பால், கற்றாழை ஜெல் போன்ற ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

தக்காளி
தக்காளி ஒரே வாரத்தில் அக்குளில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்கும். அதற்கு தக்காளியை வெட்டி அதை அக்குளில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், அக்குள் கருமை சீக்கிரம் மறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button