29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ddds
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் சரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா?

என்ன புரியவில்லையா? ஆம், ஷீட் மாஸ்க் என்பது சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உட்பொருட்களை கொண்ட சீரம் அல்லது ஜெல் தடவப்பட்ட ஒரு ஈரப்பசைமிக்க பேப்பர். இந்த பேப்பர் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும்.

சொல்லப்போனால், ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் பேக் போன்றவற்றை விட, மிகவும் எளிமையான செயல்முறையைக் கொண்டது. இதை ஒருமுறை பயன்படுத்த ஆரம்பித்தால், பின் நீங்கள் ஷீட் மாஸ்க்கை மட்டுமே பயன்படுத்துவீர்கள். ஷீட் மாஸ்க்கில் பல வெரைட்டிகள் உள்ளன. சரும வகைக்கு ஏற்ப ஷீட் மாஸ்க்குகள் கடைகளில் விற்கப்படுகின்றன. எனவே அடுத்த முறை கடைக்கு சென்றால், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் க்ரீம் வாங்குவது போன்று ஷீட் மாஸ்க்கையும் வாங்கி பயன்படுத்துங்கள். சரி, இப்போது ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
ddds
சரும வறட்சியைத் தடுக்கும்

ஷீட் மாஸ்க்கில் கொரியன் ஷீட் மாஸ்க் மிகவும் சிறந்தது. இந்த ஷீட் மாஸ்க்கை சரும வறட்சியால் அவஸ்தைப்படுபவர்கள் பயன்படுத்தினால், சரும வறட்சி உடனடியாக தடுக்கப்பட்டு, சருமம் பொலிவோடும் அழகாகவும் காட்சியளிக்கும். முக்கியமாக ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவதால், அது சருமத் துளைகளினுள் ஆழமாக சென்று, விரைவில் சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். சரும வறட்சியானது போதுமான நீர்ச்சத்து சரும செல்களுக்கு கிடைக்காததால் ஏற்படுவதாகும். ஷீட் மாஸ்க் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்தை வழங்குவதால், உடனடி பலனைக் காண முடியும்.
fdgsdfg
சருமத்தை சுத்தம் செய்யும்

கொரியன் ஷீட் மாஸ்க் சருமத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும். இந்த ஷீட் மாஸ்க்கில் உள்ள அத்தியாவசியமான உட்பொருட்கள் மற்றும் அழக்குகளை வெளியேற்றும் பண்புகள், சருமத்தை சுத்தமாகவும், பொலிவாகவும் காட்டும். சில வகையான மாஸ்க்குகளில் சாம்பல் நிறைந்திருக்கும். இந்த வகை மாஸ்க்குகள், சருமத்தின் ஆழத்தில் தேங்கி இருக்கும் அழக்குகளை உறிஞ்சிவிடும்.

sadfsfds
சரும நிறத்தை கூட்டிக் காட்டும்

கொரியன் ஷீட் மாஸ்க்கில், சருமத்தை உடனடியாக பொலிவூட்டிக் காட்டும் பண்புகள் ஏராளமாக உள்ளது. எனவே நீங்கள் பொலிவிழந்து, கருமையாக காட்சி அளித்தால், கொரியல் ஷீட் மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்துங்கள். இதனால் முதல் உபயோகத்திலேயே ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். மேலும் கொரியல் ஷீட் மாஸ்க் முகத்தில் உள்ள சோர்வை நீக்குவதோடு, கருமையான தழும்புகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் குறைக்கும்.

முகப்பருவைக் குறைக்கும்

ஷீட் மாஸ்க்கைப் பயன்படுத்தினால் முகப்பரு குறையும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், இந்த வகை மாஸ்க் முகப்பருக்களைக் குறைப்பதோடு, முழுமையாக போக்கிவிடும். அதிலும் டீ-ட்ரீ, க்ரீன் டீ மற்றும் கற்றாழை அடங்கிய ஷீட் மாஸ்க்கைப் பயன்படுத்தினால், முகப்பரு காணாமல் போய்விடும். மொத்தத்தில் ஷீட் மாஸ்க் அனைத்து வகையான சருமத்தினருக்கும் நல்ல மாற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
gfhfj
ஷீட் மாஸ்க்கை எப்படி பயன்படுத்துவது?

ஷீட் மாஸ்க்கை எப்படி பயன்படுத்துவது? இது மிகவும் எளிமையானது. முதலில் முகத்தை நீரில் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். பின் ஷீட் மாஸ்க்கை முகத்தில் வைத்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீக்கிட வேண்டும்.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?

ஷீட் மாஸ்க்கை வாரத்திற்கு மூன்று முறை உபயோகிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முக்கியமாக ஷீட் மாஸ்க் போடுவதற்கு நேரம் எதுவும் ஒதுக்க தேவையில்லை. இந்த வகை மாஸ்க்கை வீட்டை சுத்தம் செய்யும் போது, சமைக்கும் போது, படிக்கும் போது, டிவி பார்க்கும் போது என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Related posts

தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவரே தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சொல்கிறார்!…

nathan

நடந்தது என்ன? வனிதாவிற்கு ஏற்பட்ட சோகம்: மரணம் எல்லோருக்கும் வரும் என ரசிகர்கள் ஆறுதல்!

nathan

அடேங்கப்பா! மொட்டை ராஜேந்திரனின் மனைவி யாருன்னு தெரியுமா ??

nathan

வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர்

nathan

இரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம்

nathan

வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு காஃபி கொட்டை ஃபேஸ்பேக்..

nathan

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan

காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்? மாணவி வாக்குமூலம்

nathan