நகம் அழகாக நகம் வளர்த்து நெயில் பாலிஷ் போட வேண்டும் என்றால் எல்லோருக்கும் விருப்பம் தான்.
ஆனால் நகங்கள் உடைந்து அல்லது உறுதியாக இல்லாமல் இருந்தால் சற்று எரிச்சல் தான் வரும். எனவே உங்கள் நகம் உடையாமல் உறுதியாக இருக்க நீங்கள் வெள்ளரி விதை எண்ணெயை நகங்களில் தேயுங்கள். விரைவில் உறுதியாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும். பின்பு விதவிதமான நெயில் பாலிஷ் போட்டு அசத்துங்கள்.