24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hgvjhg
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் உங்களுக்கு எண்ணெய் சருமமா அப்போ ரோஜா பூவை இப்படி மிஸ்ட்டா மாற்றி யூஸ் பண்ணுங்க.

தினமும் நம் வெளியில் சென்று வருவதற்குள் அதிகப்படியான அழுக்குகள், தூசிகள், மாசு மற்றும் சூரியனின் கதிர்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் சரியாகச் சருமத்தினை பாதுகாக்காமல் விடுதல் போன்றவை உங்கள் சருமத்திற்குப் பிரச்சனைகளை ஏற்படும்.

இதற்குத் தீர்வாக உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சி தேவைப்படுகிறது. இதனைத் தான் பேசியல் மிஸ்ட் என்று அழைக்கின்றன. உங்கள் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சியை பேசியல் மிஸ்ட் உங்களுக்கு வழங்கும்.

உங்கள் சருமம் எப்போது சோர்வாக அல்லது மந்தமாக உணருகிறது என்று உங்களுக்குத் தோனுகிறதோ அப்போது நீங்கள் இந்த பேசியல் மிஸ்டினை பயன்படுத்தலாம். உங்கள் முகத்தில் நீங்கள் பேசியல் மிஸ்ட் பயன்படுத்திய உடன் உடனடி மாற்றத்தினை நீங்கள் உணருவீர்கள். இதனை நீங்கள் ஒரு நாள் முழுவதும் கூட பயன்படுத்தலாம். இப்போது முக்கியமாக எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கான பேசியல் மிஸ்ட் வகைகளைப் பார்க்கலாம்.
வேப்ப இலைகள்
hgvjhg
வேப்ப இலைகள் மற்றும் கிராம்பு எண்ணெய் இரண்டும் உங்களின் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சி, கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்தில் ஏற்படும் பிரேக்அவுட்கள் மற்றும் பிற சிக்கல்களையும் சரி செய்ய உதவுகிறது. வேப்ப இலைகளில் உள்ள கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. கிராம்பு எண்ணெய் ஆக்ஸிஜனேற்றம், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்திற்கு ஈரப்பத தன்மையைக் கொடுக்கும்.

ஒரு கையளவு வேப்ப இலைகள், 4 கப் தண்ணீர், 3 முதல் 4 துளி கிராம்பு அத்தியாவசிய எண்ணெய் எடுத்து தண்ணீரில் வேப்ப இலைகளைப் போட்டு அடுப்பில் வைத்து தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு 1/4 ஆக தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வையுங்கள். பின்னர் அவற்றை எடுத்து ஆற வைத்து கிராம்பு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிச் சேகரித்து வைத்து தேவையான போது உபயோகித்துக் கொள்ளுங்கள். இந்த மிஸ்டினை உங்கள் முகத்தில் 2 முதல் 3 முறை அடியுங்கள். அப்போது தான் மிஸ்டினை உங்கள் முகம் நன்றாக உறிஞ்சும்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ மற்றும் கிரீன் டீ ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் மென்மையாக வைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பினோல்கள் உங்கள் சருமத்தில் எண்ணெய் வடித்தலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரண்டு கிரீன் டீ பைகள், இரண்டு கப் தண்ணீர், இரண்டு முதல் மூன்று 3 சொட்டு வைட்டமின் ஈ எண்ணெய் எடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கிரீன் டீ பைகளைப் போட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊற விடுங்கள். பின்பு பைகளை எடுத்து விட்டு தண்ணீர் கரைசலை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி 2 முதல் 3 முறை உங்கள் முகத்தில் மிஸ்டினை உறிஞ்சுமாறு அடித்துக் கொள்ளுங்கள். இதனைத் தேவையான போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் மற்றும் காட்டுச் செடி இரண்டும் உங்கள் சருமத்தினை ஈரப்பத மூட்டுவதற்குச் சிறந்த ஒன்றாகும். வெள்ளரிக்காய் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கவும், புத்துயிர் பெறவும் உதவுகிறது. காட்டுச் செடி (ஹேசல்) ஆண்டிசெப்டிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

இரண்டு வெள்ளரிக்காய்கள் சேர்த்து ஜூஸ் எடுத்து அதனுடன் காட்டுச் செடி இலைகளைச் சேர்த்து அரைத்து வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் கலவையை ஊற்றி நன்றாக கலந்து 2 முதல் மூன்று முறை முகத்தில் மிஸ்ட் உறிஞ்சும் வரை தெளித்துக் கொள்ளுங்கள். இதனைத் தேவைப்படும் எடுத்து உபயோகித்துக் கொள்ளுங்கள்.

கற்றாழை

கற்றாழை, எலுமிச்சை சாறு, ரோஜா பூ மற்றும் புதினா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கற்றாழை ஆக்ஸிஜனேற்ற பண்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தினை நீரேற்றத்துடனும் மற்றும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது. அத்துடன் முகங்களில் இருக்கும் நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு வடுக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தினை சரி செய்கிறது. எலுமிச்சை சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. ரோஜா பூக்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்து மென்மையானதாக மாற்றுகிறது. புதினா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தினை நீரேற்றமாக வைத்து ஆரோக்கியமான சருமத்தினை ஊக்குவிக்கிறது.

ஒரு தேக்கரண்டியளவு கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறு ஒரு சில ரோஜா இதழ்கள் மற்றும் சிறிதளவு புதினா இலைகள் எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் சிறிதளவு தண்ணீர் வைத்து புதினா இலைகள் மற்றும் ரோஜா பூக்களின் இதழ்களைப் போட்டு கொதிக்க வையுங்கள். பின்பு அந்த நீரினை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கற்றாழை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஸ்பிரே செய்யுங்கள். நாள் முழுவதும் தேவைப்படும் போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கிரீன் டீ

கிரீன் டீ மற்றும் காட்டுச் செடி, கிரீன் டீயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காட்டுச் செடியின் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளுடன் கலந்து ஒரு நல்ல மிஸ்டினை உங்களுக்குத் தரும். இது உங்கள் சருமத்தினை ஹைட்ரேட் செய்து புத்துணர்ச்சி அளிக்கிறது.

ஒரு கப் கிரீன் தேநீர் ஒரு தேக்கரண்டியளவு காட்டுச் செடி, 1 முதல் 2 சொட்டுகள் ஜோஜோபா எண்ணெய் எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி ஆற வைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி நன்றாக ஷேக் செய்து முகத்தில் ஸ்பிரே செய்யுங்கள். உங்கள் முகத்தில் ஸ்பிரேவினை உறிஞ்ச 2 நிமிடங்கள் ஆகும். உங்களின் எண்ணெய் சருமத்தினை சரி செய்ய உங்களுக்கு ஏற்ற மிஸ்தினை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

Related posts

சூப்பர் டிப்ஸ்.. இதை ஒரு தடவை செய்தால் போதும் மருவை நிரந்தரமாக நீக்கும் வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

nathan

நம்ப முடியலையே…கீர்த்தி சுரேஷின் மகனுக்கு பிறந்தநாள் ! வெளியிட்ட போட்டோ..

nathan

தமிழ் பெண் கண்ணம்மாவா இது?புடவையில் வைலரகும் புகைப்படம்

nathan

முகப்பருக்களை ஒழிக்க காளான்!…

sangika

எண்ணெய் பசை சருமத்திற்கான‌ 10 பயனுள்ள ஆயுர்வேத தீர்வுகள்

nathan

முகம் பளபளப்பாக எளிய அழகுக் குறிப்புகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கோதுமை மாவும் சருமத்தை அழகாக்கும்

nathan

முதல் காதலரையே திருமணம் செய்யும் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசி யார் யார்னு தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

அழகை மேம்படுத்த சில குறிப்புகள் இயற்கை வழிமுறை…

nathan