தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனா 50மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதுபோன்று பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
1992ம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தலைவாசல் விஜய். இவர் இதுவரை 100 படங்களுக்கு மேல் படித்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். காதல் கோட்டை படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்து இருப்பார்.
தலைவாசல் விஜய் என்றவுடன் நாம் முனுமுனுக்கும் பாடல் ‘கவலைப்படாதே சகோதரா பாடல் ‘ தான். அந்த அளவுக்கு அந்த பாடல் வெற்றி பெற்றது. இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அழகு என்ற நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரது மகள் ஜெயவீனா வீச்சல் வீராங்கனை ஆவார். சிறு வயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். நேபால் தலைநகரான காட்மண்டுவில் 13வது தெற்காசிய போட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயவீனா, 50மீட்டர் பிரஸ்ட் ஸ்டோரக் பிரிவின் வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாம் இடத்தைப்பிடித்துள்ளார்.
தனது மகளை ஊக்குவிப்பதற்காக தலைவாசல் விஜய் மகளுடன் நேபால் சென்றிருக்கிறார். அப்போது தன் மகள் வெள்ளி வென்றவுடன் நெகிழ்ச்சியில் உறைந்து போனார். இதுபோல மேலும் பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடந்து முடிந்துள்ள 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 174தங்கம் , 93வெள்ளி மற்றும் 45வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களுடன் முதல் இடத்தை பெற்றுள்ளது. 51 தங்க பதக்கங்களுடன் மொத்தமாக 206 பதக்கங்களுடன் நேபால் இரண்டாம் இடத்தையும், 40தங்கம் உட்பட மொத்தம் 251 பதக்கங்களுடன் ஶ்ரீலங்கா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது .