22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
65tuytiu
அழகு குறிப்புகள்

உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க.. இப்படி தினமும் செய்தால், சரும கருமை நீங்கி, வெள்ளையாக முடியும்.

இன்று பலர் தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க விரும்பி சரும நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர்.

இது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தி வேறு பல சரும பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகின்றது.

இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.

அதில் உருளைக்கிழங்கும், எலுமிச்சையுமே பெரிதும் சருமத்திற்கு உதவி புரிகின்றது. தற்போது இதனை வைத்து முகத்தை எப்படி வெள்ளையாக்க முடியும் என பார்ப்போம்.
65tuytiu
கருமை அதிகமாக இருந்தாலோ அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ, உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சரும கருமை நீங்கி, வெள்ளையாக முடியும்.

உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு 20 நிமிடங்கள் உருளைக்கிழங்கு துண்டை கண்களின் மீது வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி வர, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் காணாமல் போகும்.
hgj
உருளைக்கிழங்கு சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் கண்களை மூடியிருக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கண்களைச் சுற்றியுள்ள வீக்கமும் குறையும்.

5 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, பின் சிறிது நேரம் கழித்து ஒரு கப் நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத் துளைகளின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.

மெல்லிய துணியை உருளைக்கிழங்கு சாற்றினை நனைத்து, பின் அந்த துணியை முகத்தில் வைத்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.

Related posts

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

sangika

beauty tips.. முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றத்துடன் ஜொலிக்க ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் அற்புத மருத்துவம்..

nathan

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென மாறவேண்டுமா?

nathan

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

nathan

இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! முகப்பருக்களை முற்றிலும் நீக்க

nathan

சின்ன சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினையை சரி செய்ய வழியே இல்லையா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

நம்ப முடியலையே…அச்சு அசலாக நயன்தாரா போலவே மாறிய அனிகா…

nathan

சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர்!…..

sangika