26.7 C
Chennai
Tuesday, Feb 18, 2025
tgrfhghg
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

குலோப் ஜாம் எளிமையான செய்முறை

நாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுனும் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும்.

அதனால் குலாப் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் அவசியம். இப்பொழுது கீழே குலோப் ஜாம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

குலாப் ஜாமுன்

குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு.

tgrfhghg
Ingredients for குலாப் ஜாமுன்

500 கிராம் குலோப் ஜாம் மாவு
700 கிராம் சர்க்கரை
நெய் தேவையான அளவு
ஏலக்காய் தூள் தேவையான அளவு
பிஸ்தா தேவையான அளவு

How to make குலாப் ஜாமுன்

முதலில் ஒரு bowl ல் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பக்குவமாக பிசைந்து கொள்ளவும். (மாவை அழுத்தியோ அல்லது சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைய கூடாது.
அப்படி பிசைந்தால் குலோப் ஜாம்ஐ பொரித்து எடுக்கும் போதே இறுக்கமாக அல்லது விரிசல் விழுந்து விடும்.)
மாவை பக்குவமாக பிசைந்ததும் அதில் தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.
மாவு பக்குவத்தை எட்டுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு சர்க்கரைக்கு மேலே ஒரு இன்ச் அதிகமாக தண்ணீர் வருமளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு வட சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக பக்குவமாக உருட்டிஎண்ணெயில் போடவும். (மாவை சிறு சிறு உருண்டைகளாக ஒரே நேரத்தில் உருட்டி வைக்கக்கூடாது. ஏனென்றால் மாவில் விரிசல் விழுந்து விடும்.)
மாவு உருண்டைகளை மெதுவாக திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
உருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
அப்பொழுது தான் குலோப் ஜாம்ல் ஜீரா நன்றாக ஒட்டி மிருதுவாக இருக்கும்.
இவ்வாறு வடசட்டியின் அளவிற்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறையாக உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போடவும்.
மொத்தமாக பொரித்து போட்டதும் அதை அப்படியே ஒரு மூடி போட்டு 5 லிருந்து 6 மணி நேரம் ஊறவிடவும்.
6 மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதன் மேலே சிறு பிஸ்தா துண்டுகளை வைத்தால் உங்கள் இனிப்பான, சுவையான குலோப் ஜாம் தயார்.
இது வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டாருக்கு கொடுத்து உண்டு மகிழுங்கள்.

Related posts

அவல் தோசை

nathan

அவல் புட்டு

nathan

புழுங்கல் அரிசி முறுக்கு

nathan

காளான் கபாப்

nathan

அவல் உசிலி

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

மொறுமொறுப்பான… ரவா கட்லெட்

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan