29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
doctor advice
மருத்துவ குறிப்பு

பெண்களின் சிறுநீர்க்கசிவுக்கு மருத்துவம்

சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். வீட்டில் நடக்கும் சுப காரியங்களில் கூட கலந்து கொள்வதில்லை.வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர்.வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம் இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது.  ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும். இதுதவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரும் தண்ணீரும் நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.doctor advice

Related posts

விவாகரத்தான பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

nathan

உங்களுக்கு சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?

nathan

இதோ எளிய நிவாரணம்! வறட்டு இருமலை முற்றிலும் நீக்கும் மஞ்சளின் மருத்துவ பயன்கள்…!!

nathan

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி. எது தவறு?

nathan

வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள்

nathan

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

nathan

கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா

nathan

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

‘இந்த’ மாத்திரைகளை அதிகளவு எடுத்துக்கிட்டா… உங்களுக்கு புற்றுநோய் வர ஆபத்து அதிகம் இருக்காம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan