26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
tiuiyuiuti
மருத்துவ குறிப்பு

ஆஸ்துமா பிரச்னையுள்ள கர்ப்பிணிகள் இன்ஹேலர் உபயோகிப்பது பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

ஆரோக்கியத்துக்கான விஷயமாகக் குறிப்பிடப்படுவது, வெறுமனே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மட்டுமல்ல.

`கர்ப்பகாலத்தின் போது என்னென்ன பிரச்னைகள் மற்றும் சிக்கல்களெல்லாம் வரலாம், அவற்றையெல்லாம் முன்கூட்டியே தடுப்பது எப்படி’ என்பதை அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்வதே!
கர்ப்ப காலம்

இந்த முன்னெச்சரிக்கை விஷயத்தில் மற்ற பெண்களைவிடவும் வாழ்வியல் பாதிப்புள்ள பெண்கள், `எக்ஸ்ட்ரா கேர்’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக, ஆஸ்துமா பிரச்னையுள்ள பெண்கள், அன்றாட வாழ்வியல் முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர். காரணம், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் அசௌகர்யங்களில் முக்கியமானது, மூச்சுத்திணறல். ஏற்கெனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தால், கர்ப்பகாலத்தில அது தீவிரமாகலாம் என்பதே அவர்களின் கருத்து.
tiuiyuiuti
சர்வதேச நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு’ ஆணையத்தின் கூற்றுப்படி, 4 முதல் 12 சதவிகிதப் பெண்களுக்கு அவர்களின் கர்ப்பகாலத்தின்போது ஆஸ்துமா ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் பிரச்னை ஏற்படுகிறதென்றால், அந்த மூச்சுத்திணறல், குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, தேவையில்லாத சிக்கல்களையும் அசௌகர்யத்தையும் தரலாம். முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களோடு தொடர்புள்ளது என்பதால், மற்ற காலங்களைவிடவும் மழைக்காலத்தில், ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது.
ஆஸ்துமா

ஆஸ்துமா பிரச்னையுள்ள கர்ப்பிணிகள், மழைக்காலத்தில் தங்களையும் தங்களின் கருவையும் ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது எப்படி?

விளக்கிச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமார்.
மகப்பேறு மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமார்

“ஆஸ்துமா நோயாளிகள் அனைவருக்கும், `இந்த நேரத்தில் – இந்தச் சூழலில் எனக்கு ஆஸ்துமா அதிகரிக்கும்’ என குறிப்பிட்டுச் சொல்லும்படியான சூழல்கள் சில இருக்கும். இந்தச் சூழல்கள் யாவும், `ஆஸ்துமா ட்ரிக்கர் சிச்சுவேஷன்ஸ்’ எனப்படும். அந்த வகையில், தனக்கான ட்ரிக்கர் எது என்பதை நோயாளிகள் சுயமாக அறிந்துவைத்திருந்து, முன்கூட்டியே அவற்றைத் தடுக்க வேண்டும். தடுக்க முடியவில்லை என்பவர்கள், அதை எதிர்கொள்ளத் தயாராக இன்ஹேலர்ஸ் – டோசேஜ் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இயல்பிலேயே டஸ்ட் அலெர்ஜி உள்ள ஆஸ்துமா நோயாளிகளுக்கு, காற்றிலேயே ஒட்டியிருக்கும் மழை நேர மாசுக்கள் அதிக பிரச்னையைத் தரும். அப்படியிருக்கும்போது, அன்றாடம் அளவுக்கதிகமான தூசுகளை உள்ளிழுக்கும் சூழலுக்கு மத்தியில் வாழ்பவர்கள், முடிந்தவரை அந்தச் சூழலைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
பெரும்பாலான பெண்களுக்கு, அவர்களின் 24 முதல் 36-ம் வார இடைவெளியில்தான், ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்தக் காலகட்டத்தில், பெண்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்!
ioyuoi
கர்ப்பகாலத்தில் ஆஸ்துமா கட்டுப்பாட்டுக்கு இன்ஹேலர் உபயோகிப்பது, குழந்தையையும் இந்த நோய்க்குக் கொண்டு வந்துவிடுமோ எனச் சிலர் பயப்படுவது உண்டு. இப்படி யோசிப்பவர்கள், மூச்சுத்திணறல் தீவிரமாகும் வரையில் இன்ஹேலர் உபயோகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள். இவர்கள், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமாக சுவாசிக்கும் தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள்தான் ஆரோக்கியமாகப் பிறப்பார்கள். சொல்லப்போனால், சுவாசச் சிக்கல்களோடு கர்ப்பகாலத்தைக் கடப்பதுதான், குழந்தைக்கு ஆபத்தாக முடியும். எந்தச் சூழலிலும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில், உட்புற மற்றும் வெளிப்புற தூசுகள் காற்றோடு அதிகம் கலந்திருக்கும் என்பதால், பெரும்பாலானோருக்கு மழைக்காலத்தில்தான் ஆஸ்துமா தீவிரமாகும்.
கர்ப்ப காலம்

ஆஸ்துமா சிறப்பு நிபுணர்களை அணுகி, `நீங்கள் ஒரு நாளில் இத்தனை முறை இன்ஹேலர் உபயோகிக்கலாம்’ என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளவும். அத்தனை முறை தயக்கமின்றி உபயோகிக்கவும். ஒருவேளை அதைவிட அதிக முறை உபயோகிக்க நேர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் ஆஸ்துமா பிரச்னையுள்ள கர்ப்பிணிகள் கவனத்துக்கு…

* தூசு – மாசு அதிகமிருக்கும் இடங்கள், மகரந்தங்கள் நிறைந்த தோட்டப் பகுதிகளில் அதிக நேரம் இருக்க வேண்டாம்.

* நோய்த்தொற்று தடுப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு, மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடப்பது, சுகாதாரமற்ற கழிவறை உபயோகம் போன்றவையெல்லாம் ஆஸ்துமாவை அதிகரித்துவிடலாம். ஆகவே, சுத்தம் – சுகாதாரம் கட்டாயம்!

* வீட்டின் தரைகளை மட்டுமின்றி, பொருள்களையும் தூசு சேராமல் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். குறிப்பாகத் தலையணைகள் – போர்வைகள் – இருக்கைகள் போன்றவை தூசு படியாமல் இருக்க வேண்டும்.
* வைரல் காய்ச்சல் மற்றும் வைரல் தொற்று ஏற்பட்டால், அலட்சியம் கூடாது. காலதாமதமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலம்

* முடிந்தவரை கர்ப்பகாலத்தில் ஆஸ்துமா காரணமாக மூச்சுத்திணறலோ – `ஆஸ்துமா அட்டாக்’கோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காரணம், இப்படி ஏற்படும்போது கர்ப்பகால அசௌகர்யங்களில் ஒன்றான மூச்சுத்திணறலும் கூடவே சேர்ந்துகொள்ளும். இவை யாவும், சிசுவைப் பாதிக்கலாம். முக்கியமாக, சிசுவுக்குத் தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்காமல் போய்விடும். ஆகவே கவனம் தேவை.
ஆஸ்துமா ட்ரிக்கருக்கும் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்காது என்பதால் மருந்து உட்கொள்வதில் தயக்கம் தேவையில்லை.

* எது எப்படியாகினும், தனக்கான `ஆஸ்துமா ட்ரிக்கர்’ எதுவென்பது தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒருசிலருக்கு, எமோஷனல் ட்ரிக்கர் ஆஸ்துமா இருக்கலாம். அதாவது, உணர்ச்சிவசப்படும்போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல். தனக்கான இந்தச் சூழலை எப்படிக் கையாள்வதென, குறிப்பிட்ட நபருக்கு சுயமாகத் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயம்.

* ஆஸ்துமா பிரச்னையுள்ள பெண்களின் முதலும் முக்கியமுமான பயம், கர்ப்பத்தின்போது உடலில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்கள்தாம். `ஏற்கெனவே ஹார்மோன் இம்பேலன்ஸா இருக்கும். இந்த நேரத்துல ஆஸ்துமாவுக்கு மாத்திரை எடுத்துக்குறது சரியா… இந்த மாத்திரைகளாலதான் ஆஸ்துமா அதிகரிக்கிறதா’ என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். உண்மையில், ஆஸ்துமா ட்ரிக்கருக்கும் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்காது. ஆகவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தயக்கமின்றி உட்கொள்ளலாம்
மகப்பேறு மருத்துவர் காவ்யா கிருஷ்ணகுமார்உணவுமுறையில் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிபுணரிடம், ஆலோசனையுடன் உணவுமுறையையும் அமைத்துக்கொள்வது சிறப்பு

விழிப்புணர்வோடு செயல்பட்டால், ஆஸ்துமா என்பது முழுக்க முழுக்க கட்டுப்படுத்தக்கூடிய பாதிப்புதான் என்பதால், எந்தவித பயமும் பதற்றமுமின்றி, பெண்கள் இந்தக் காலத்தை எதிர்கொள்ளலாம்” என்கிறார் காவ்யா கிருஷ்ணகுமார்.

Related posts

இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்

nathan

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் உடல் உபாதைகள்

nathan

உங்கள் குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் தரும் பெண்கள் குளிர்பானங்கள் குடிக்கலாமா?

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

தலைவலியை தவிர்க்கும் வழிமுறைகள்

nathan

பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!

nathan

குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்

nathan

தெரிந்துகொள்வோமா? தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தப்பி தவறி கூட சாப்பிடாதீர்கள்!

nathan