29.5 C
Chennai
Sunday, May 19, 2024
hfjfj
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

அச்சு முறுக்கு

தேவையான பொருட்கள்.:
பச்சரிசி மாவு – ஒரு கப்,
மைதா மாவு – அரை கப்,
பொடித்த சர்க்கரை – அரை கப், கண்டன்ஸ்டு மில்க் – 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),

கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப்,
கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),
உப்பு – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு.
hfjfj

செய்முறை.:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்றாகக் களைந்து வெயிலில் அரை மணி காயவைக்கவும்.

பிறகு மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மைதா மாவு இரண்டையும் நன்றாக சலித்து அத்துடன் பொடித்த சர்க்கரை உப்பு எள் கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

இத்துடன் தேங்காய்ப்பாலைச் சேர்த்து மாவைக் கரைத்துக்கொள்ளவும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் நீரையும் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்துக்கு இருக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு காயவைக்கவும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் அச்சு முறுக்கு அச்சை வைத்து சூடாக்க வேண்டும்.

பிறகு எண்ணெயில் உள்ள முறுக்கு அச்சை வெளியில் எடுத்து கரைத்துவைத்துள்ள மாவில் அச்சு முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்கு முக்கி எடுக்கவும்.

அச்சின் சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும்.

உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காயவைத்துள்ள எண்ணெயில் மூழ்கும்படி வைக்கவும்.

சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிந்துவிடும்.

அச்சு முறுக்கு பொன்னிறமாக இருபுறமும் வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

Related posts

மாலை நேர டிபன் ரவா கிச்சடி

nathan

இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாற தக்காளி கார சால்னா…..

sangika

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

வெண் பொங்கல்

nathan

சுவையான வெண்டைக்காய் பக்கோடா

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan