சிலருக்கு முகம் மற்றும் கழுத்து பகுதியில் கருமை நிறம் படிந்திருக்கும். அதனைப் போக்க சில எளிய டிப்ஸ் இதோ:
தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். எனவே, இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
2 தேக்கரண்டி பால் பவுடர் மற்றும் 1 தேக்கரண்டி ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பால் பவுடர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மற்றும் சருமத்தின் மென்மையை மேம்படுத்த மிகவும் நல்ல பொருள். பால் பவுடரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தரும்.
தக்காளி சாறு, தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு- தலா 1 தேக்கரண்டி எடுத்து நன்கு ஒருசேர கலந்து கருப்பாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவலாம். 15 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தேன் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. சொல்லப்போனால் இது ஒரு வரப்பிரசாதம். தக்காளியில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற விட்டு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் துணியால் துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்தலாம்.மஞ்சளில் மருத்துவ பண்புகள் அதிகம் உள்ளது. இது பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவாக்க உதவுவதோடு, முகத்தில் உள்ள பருக்களையும் தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ், சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.