29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
முகப் பராமரிப்பு

சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க கோல்டன் பேஷியல்….?சூப்பர் டிப்ஸ்…

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். இந்த கோல்டன் ஃபேஷியல் கிட்டை கடைகளிலும் பெற்று கொள்ளலாம். இருப்பினும் வீட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழி.

தேவையான பொருட்கள் :

ஆரஞ்ஜ்

கற்றாழை

முல்தானிமட்டி

காட்டன் துணி

தண்ணீர்

முதலில் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அதனை பாதியாக அறுத்துக்கொள்ளவும். பின்பு கற்றாழையை எடுத்து அதனில் உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். அதன்பிறகு இந்த  முறையை கடைபிடிக்கவும்.மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்

அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் பூசி கொள்ளவும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி சிறந்த ஒன்று. மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம். இதனை கண்கள், மூக்கு, நெத்தி, தாடை ஆகிய அனைத்து பகுதிகளிலும் நன்கு தடவி மசாஜ் செய்யவும். பின்பு 5 நிமிடம் கழித்து முகத்தை உலர்த்த தண்ணீரில் கழுவி விடவும்.
அடுத்து கற்றாழை ஜெல்லை 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும். பிறகு இதனை 10 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும்.

Related posts

உலகளவில் அழகுப்படுத்திக்க செய்யப்படும் விசித்திர சிகிச்சை முறைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தேனை முகத்தில் தடவலாமா?… தடவினா எனன ஆகும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் அற்புத மாஸ்க்…

nathan

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

nathan

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan