26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
532844105
தொப்பை குறைய

சூப்பர் டிப்ஸ்! கீழ் வயிற்று தசையை மிக வேகமாக குறைக்க இத மட்டும் செய்யுங்க…

தொப்பை இருப்பவர்களில் கீழ் வயிறு பெரிதாக இருப்பவர்களுக்கு அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

உடல் எடை குறைப்பதில் இன்று நவீனத்துவம் பெற்று உடலை செதுக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள்.

கை மட்டும் சற்று ஒல்லியாக வேண்டும், தொடை,இடுப்பு,வயிறு,கழுத்து,மார்பு இப்படி தங்களுக்கு தேவையானதை மட்டும் செதுக்கிக் கொள்கிறார்கள்.

இவற்றில் சிக்கலானதாக பார்க்கப்படுவது கீழ் வயிறு. தொப்பை இருப்பவர்களின் முக்கியமான பிரச்சனை இது தான். குறிப்பாக பெண்களுக்கு முதலில் கீழ் வயிற்றுப் பகுதிகளில் தசை சேரத் துவங்கும்.

உடலின் முக்கியமான உறுப்புகள் அங்கே இருப்பதால் நினைத்த மாத்திரத்தில் கீழ் வயிற்று தசையை குறைப்பது என்பது சாதரணமானது கிடையாது.

கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேர பிற காரணங்களை விட முக்கியமாக கூறப்படுவது உங்களுடைய வாழ்க்கை முறை. அதிலும் அதிக கொழுப்புள்ள மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுப்பவருக்கு கீழ் வயிற்றில் கொழுப்பு அதிகமாக சேரும்.

மிக கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே கீழ் வயிற்று கொழுப்பினை கரைக்க முடியும்.

சர்க்கரை பொருட்களை முடிந்தளவு தவிர்த்திடுங்கள். கலோரி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதைத் தவிர ஆரோக்கியமான டயட் அவசியம்.532844105

டயட் என்ற பேரைச் சொன்னதுமே.. அரிசியை மட்டும் தவிர்த்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால் உண்மையில் இது எல்லாமே பொய்…. அரிசி கோதுமை இரண்டிலுமே மாவுச் சத்து தான் இருக்கிறது.

அதனால் ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்று இருக்கவே முடியாது. அதே போல பழங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அர்த்தமன்று அவற்றிலும் சிலவற்றை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக கலோரி அதிகமிருக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது, சதைப்பற்றுள்ள, இனிப்பான பழங்களான மா, பலா, வாழை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கலோரி குறைவான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

தண்ணீர்

நீங்களாக சிறிது நேரத்திற்கு ஒரு முறையென கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குடித்திடுங்கள்.மொத்தமாக ஒரே நேரத்தில் குடிப்பதை விட இப்படி குடிப்பது தான் நல்லது.

அதிலும் உணவு சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னதாக தண்ணீரை குடித்துப் பழகுங்கள். இப்படி குடிப்பதினால் உணவினை குறைவாக எடுத்துக் கொள்ள முடியும்.

அதே போல உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து இருப்பதினால் இனிப்புச் சுவை தேவை ஏற்படாது. தண்ணீர் சத்து குறைவாக இருந்தால் அதிகப்படியான இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்து கொண்டேயிருக்கும்.

உடற்பயிற்சி

உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க பழகுங்கள். ஒரேயிடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருக்காதீர்கள்.

விரதம்

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு காலை உணவினை சாப்பிடாமல் தவிர்ப்பது, அல்லது வாரம் முழுக்க அளவுக்கு அதிகமான கொழுப்பு, சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொண்டு விட்டு பெயரளவில் ஒரு நாள் முழுக்க விரதம் இருப்பது ஆகியவற்றை எல்லாம் செய்யக்கூடாது.

உடல் எடையை குறைக்க உணவினை தவிர்க்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தாலே போதுமானது.

Related posts

உங்களுடைய 4 பழக்கவழக்கத்தால் அனாவசியமாக ஏற்படும் தொப்பை:

nathan

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

nathan

வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி தேவை

nathan

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்

nathan

பானைப் போன்ற தொப்பை இந்த நோய்களை உண்டாக்கும்

nathan

இதோ எளிய நிவாரணம்! 12 வாரம் நைட் தூங்கும் முன் இத 1 டேபிள் ஸ்பூன் குடிச்சா.. தொப்பை காணாம போகும் தெரியுமா?

nathan

கொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்?

nathan

தொப்பையை குறைப்பது எப்படி பெண்களுக்கான குறிப்புகள்

nathan

தொப்பையை குறைக்க இதை 10 நாட்கள் சாப்பிடுங்க!!

nathan