25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6 153
பெண்கள் மருத்துவம்

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு காது குத்துவதன் காரணம் என்ன?

குழந்தைகள் பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் காது குத்துதல். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கம் நமக்கு முன்னோர்கள் அறிமுகப்படுத்தி விட்டு சென்றதால், ஏன் எதற்கு என்றே தெரியாமல் இன்று வரை பின்பற்றி வருகிறோம்.

இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு காது குத்துவது குறித்த முழு தகவல்கள் மற்றும் ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைகளுக்கு காது குத்துவது சரியா இல்லை தவறா என்பது போன்ற தகவல்கள் குறித்து படித்து அறியலாம்.!

ஒரு வயது குழந்தை! குழந்தைகள் பிறந்த பின், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் வலியும் வர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் பிறந்தவுடன் குழந்தைகள் முழு பலத்தை பெற்று விட்டிருக்க மாட்டார்கள். குழந்தைகள் முழு பலம் அல்லது ஓரளவு சக்தியை பெற சில காலம் தேவைப்படும்; எனவே குழந்தைகள் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மாத கால வயதை அடையும் வரை காது குத்துதல் போன்ற வலி தரும் நிகழ்வுகளை தவிர்த்தல் நல்லது.

விட்டுப்போனால்..? குழந்தை பிறந்த பின், அதற்கு ஏதேனும் உடல் குறைபாடு இருந்து அல்லது குழந்தை சரியான உடல் நலத்தை வளர்ச்சிக் காலத்தில் எட்டாமல் இருந்தால், அந்த சமயத்தில் குழந்தைகள் ஒன்பது முதல் பத்து வயது கால கட்டத்தை அடையும் வரை காத்து இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதலில் குத்திய காது ஓட்டை மறைந்து போனால் கூட, ஒன்பது வயது வரை காத்திருந்து பின் மீண்டும் குத்தி விடலாம்.
6320899

எது சிறந்த சாதனம்!? குழந்தைகளுக்கு காது குத்த இப்பொழுது பல விதமான சாதனங்கள் உள்ளன. என்ன புதிய சாதனங்கள் வந்து இருந்தாலும், நமது முன்னோர் பின்பற்றி வந்த காது குத்தும் ஊசி முறையே சிறந்தது. ஏனெனில் இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் காது குத்த உதவும் துப்பாக்கியில் சில வித கெமிக்கல்கள் கலப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன; அவை குழந்தையின் நலத்தை பாதிக்க வாய்ப்பு உண்டு.

யார் குத்தி விட வேண்டும்? குழந்தைக்கு காது குத்தி விட சரியான நபரை தேர்ந்து எடுத்தல் அவசியம்; அந்த நபர் கண்டிப்பாக அதிக பொறுமையை கொண்டு இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு காது குத்தும் பொழுது ஏற்படும் வலி காரணமாக, அவர்கள் கதறி அழுது காது குத்துவதை தடுக்க ஆடம் பிடிக்கலாம்; அச்சமயம் குழந்தைக்கு குறைந்த வழியை கொடுக்கும் வண்ணம், விரைவில் காதை குத்தி முடிக்கும் வண்ணம் செயல்படுபவராக இருக்க வேண்டும்.

வலி குறைக்க என்ன செய்யலாம்? காது குத்துவதால் குழந்தைக்கு ஏற்படும் வலியை குறைக்க, காது குத்திய முன், குத்த போகும் இடத்தில் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்வது நரம்புகளை மற்றும் சதையை லேசாக மரத்து போக செய்து, காது குத்தும் பொழுது வலி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் குழந்தைக்கு காது குத்தும் முன், அங்கு எண்ணெய் தடவி விட்டு பின் குத்துவது, விரைவில் குத்தி முடிக்க உதவும்; வழியையும் குறைக்கும். சில குழந்தைகள் மிகவும் அழுவதாக தோன்றினால், அவர்களை மயக்கப்படுத்தி விட்டு, காது குத்தலாம்; ஆனால் மயக்கம் தெளிந்த பின் கண்டிப்பாக அதிகம் வலி ஏற்படும்.

காது குத்திய பின்..! குழந்தைகளுக்கு காது குத்திய பின், அவர்கள் அதை பிடித்து இழுத்து விடாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கண்டிப்பாக அந்த இடத்தில் வலி இருக்கும், அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் ஒரு வித அசௌகரியம் ஏற்படும். ஆனால், எந்த காரணத்திற்காகவும் குழந்தைகள் காதையோ அதில் போட்டு விடப்பட்டு இருக்கும் கம்மலையோ இழுத்து பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளாத வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.6 153
எது சிறந்த மெட்டீரியல்? குழந்தைகளுக்கு காது குத்திய பின் அணிவிக்க மிகவும் சிறந்த மெட்டிரியலை தேர்ந்து எடுக்க வேண்டும். அப்படி தேர்ந்து எடுக்கப் போகும் மெட்டிரியல், குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று கூறப்படும் மெட்டிரியல் குழந்தைகளுக்கு போட்டு விட சிறந்தது; இது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

காது குத்திய பின்..! குழந்தைகளுக்கு காது குத்திய பின், அவர்கள் அதை பிடித்து இழுத்து விடாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கண்டிப்பாக அந்த இடத்தில் வலி இருக்கும், அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் ஒரு வித அசௌகரியம் ஏற்படும். ஆனால், எந்த காரணத்திற்காகவும் குழந்தைகள் காதையோ அதில் போட்டு விடப்பட்டு இருக்கும் கம்மலையோ இழுத்து பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளாத வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.

Related posts

கர்பத்தை தடுக்கும் நீர்க்கட்டிக்கு தீர்வு

nathan

உடல் மெலிந்தவர்களுக்கு.. எளிய வைத்திய முறைகள்..!

nathan

தாய்ப்பாலின் மகத்துவம்

nathan

குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?–உபயோகமான தகவல்கள்

nathan

பெண்களுக்கு எப்போது இறுதி மாதவிடாய் தொடங்குகிறது

nathan

பெண்களின் முன்னழகை பராமரிக்க டிப்ஸ்

nathan

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள்  உடல் பருமன் பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். 

nathan

ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம்!…

sangika

பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்

nathan