கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது.
.கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருவளையம் :
கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளால் கண்களுக்கு கீழ் உள்ள சருமம் கருப்பு-சாம்பல் அல்லது கருப்பு-நீல நிறமாக மாறிவிடும் . இதனையே கருவளையம் என அழைக்கிறோம்.
கருவளையம் ஏற்படுவதற்கான காரணம்:
துக்கமினமை :
போதுமான அளவு துக்கம் இருப்பது அல்லது இரவு தூங்கமால் இருப்பதனால் கருவளையம், தோன்றலாம் .
மனஅழுத்தம்:
வேலைப்பளு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்படும் மிகுதியான மனஅழுத்தம் காரணமாக கருவளையம் ஏற்படும்.
நச்சுத்தன்மை:
உடலில் சேரும் நச்சுக்களால் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் சுமைகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவும் கருவளையங்கள் தோன்றும்.
சைனஸ்:
சைனஸ் நோயாளிகள் கண்களைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் முறையற்றதாக இருக்கும்.முறையற்ற இரத்த ஓட்டம் காரணமாக, கருவளையங்கள் உருவாகலாம்.
திரைகளில் அதிக நேரம் பார்ப்பது
கைப்பேசித் திரைகள், கணினித் திரைகள் மற்றும் பிற கேஜெட்களின் திரைகள் ஆகியவற்றைப் பார்ப்பது கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
குறைந்த ஹீமோகுளோபின் அளவு
குறைந்த ஹீமோகுளோபின் அளவு இருண்ட வட்டங்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இது நிகழ்கிறது, இது இரத்த சோகைக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கருவளையங்கள் தோன்றும்.
கல்லீரல் பிரச்சினைகள்;
கல்லீரலில் அதிக கொழுப்பு , ஹெபடைடிஸ், மந்தமாகே அசெயல்படும் கல்லீரல் போன்ற கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களும் கருவளையங்கள் உருவாக்கக்கூடும்.
நீரிழப்பு:
உடலுக்கு போதிய நீர் கிடைக்காத போது அல்லது நீரிழப்பின் போதும் கருவளையங்கள் தோன்றக்கூடும்.
வைட்டமின்கலின் பற்றாக்குறை ;
வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் கேபறக்குரிய ஏற்படும் போது கருவளையங்கள் ஏற்படக்கூடும்.
சிறுநீரக பிரச்சினைகள்:
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரக செயல்பாட்டை குறைக்கும் மற்றும் நச்சுகள் வெளியேறும் வேகத்தை குறைக்கும். காலப்போக்கில், உடலில் நச்சுகள் குவியத் தொடங்குகின்றன. நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இருண்ட வட்டங்கள் இருக்கும்.