233709267cbb9930eec6c3fe610a9474ae2b36e51160520180
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா விஷ ஜந்துக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம்..!!

விஷ ஜந்துக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் .

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

233709267cbb9930eec6c3fe610a9474ae2b36e51160520180

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும். இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

Related posts

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை

nathan

மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

nathan

பழமைவாய்ந்த இந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள் தெரியுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

இத படிங்க சீராக்கும் கருஞ்சீரகம் சீறிப்பாய்ந்து.!

nathan

30 வயதிலேயே முதுகுவலி!

nathan

இரும்பு சத்து மாத்திரை டி.என்.ஏ.வை பாதிக்கும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

nathan

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் காவி பிடித்த பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே பற்பசை தயாரிப்பது எப்படி..?

nathan

சிறுநீரக கற்கள் – Dr.க.சிவசுகந்தன்

nathan

அவசியம் படிக்க.. பற்கள் சிதைவடைய ஆரம்பிக்க போகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!

nathan