அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! பாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி..

திருமணத்திற்கு தங்கத்திற்கு பதிலாக தக்காளியால்

செய்யப்பட்ட நகைகளை பாகிஸ்தானில் ஒரு மணப்பெண் அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் தக்காளி விலை தாருமாறாக உள்ளது. நம்மூரில் வெங்காயம் எப்படி பெரிய விலையில் இருக்கிறேதா அதைவிட இரண்டு மடங்கு அதிமான விலையில் தக்காளி விற்கிறது

நம்மூரில் சின்ன வெங்காயம் விலை 120 ரூபாய் என்றால் அந்த நாட்டில் தக்காளி விலை 320 ரூபாய் ஆக உள்ளது. இந்த நிலை உயர்வால் பாகிஸ்தான் மக்கள் சமையலில் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.

தக்காளி விலை

உரிய நடவடிக்கை எடுத்து தக்காளி விலையை பாகிஸ்தான் அரசு கட்டுக்குள் வைக்கமால் இருப்பதால் அந்நாட்டு அரசு மீது பாகிஸ்தான் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.
hjvv
தக்காளி நகை
பாக். மணப்பெண்

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தில் தங்கத்தை போல் கழுத்து, காது, கைகள், தலை என தக்காளி நகைகளாக அணிந்திருந்தார். தங்கம் போல் தக்காளி விலை உயர்திருப்பதை உணர்த்தும் வகையில் அந்த தக்காளி நகைகளை மணப்பெண் அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீதனமாக தக்காளி
3 கூடை தக்காளி

இதன் வீடியோவை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனாயத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கிடையே தக்காளியை நகையாக அணிந்த மணப்பெண்ணுக்கு சீதனமாக 3 கூடை தக்காளியை அவரது பெற்றோர் பரிசளித்துள்ளனர்.

காவலர்கள் நியமனம்
விவசாயிகள் அதிரடி

பாகிஸ்தானில் தக்காளியைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் காவலர்களை நியமித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் நம்மூரில் தக்காளி விலை கிலோ 10 முதல் 20 ரூபாய் என்ற அளவில்தான் இப்போது இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button