24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
huiuyhi
அழகு குறிப்புகள்

வாழைப்பழத் தோலால் நமக்கு எந்த வித நன்மைகளும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்….தொடர்ந்து படியுங்கள்

நாம் பொதுவாக வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோலை கீழே போட்டு விடுவோம்.

ஏனென்றால் வாழைப்பழத் தோலால் நமக்கு எந்த வித நன்மைகளும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது. நாம் கீழே போடும் வாழைப்பழத் தோலில் தான் பலவித நன்மைகள் உள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.

வாழைப்பழத் தோலின் மருத்துவ நன்மைகள்:

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது, பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

வாழைப்பழத் தோலிலுள்ள வைட்டமின் ஊ சத்துக்கள் நமது உடம்பில் புதிய திசுக்கள் மற்றும் தசைநார்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
huiuyhi
வாழைப்பழத் தோலைக் கொண்டு இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்குவதோடு, புதிதாக மருக்களும் உருவாகாமல் இருக்கும்.

வாழைப்பழத் தோலில் உள்ள வைட்டமின் டீ12 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நரம்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

சொரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு வாழைப்பழத் தோல் ஒரு அருமருந்தாகும். மேலும் தோல் சிவந்து தடிப்பாக காணப்படும் இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்த்தால் சருமம் இயல்பு நிலைக்கு திரும்புவது மட்டுமின்றி, அரிப்பும் நீங்கும்.

வாழைப்பழத் தோலின் உட்பகுதியைப் பற்களில் தேய்த்துவர, பற்களின் மஞ்சள் தன்மை நீங்கி, பற்கள் வெண்மையாகும்.

முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவி, பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.

உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால், வாழைப்பழத்தின் தோலை பருக்கள் அதிகம் வரும் பகுதியில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.

தினமும் வாழைப்பழத் தோலில் உள்ள நார் போன்ற சதையை சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.

Related posts

கருப்பா இருந்தாலும் களையா தெரிய தினமும் 10 நிமிடம் – போதும்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி?

nathan

அல்சர் நோயினால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க…நமது தொப்புளை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

nathan

செம்ம மாஸான கெட்டப்பில் பிக்பாஸிற்கு வரும் சிம்பு -வெளிவந்த தகவல் !

nathan

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள்!…

sangika