29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
​பொதுவானவை

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்
ஒரு பெண் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்? திருமணத்திற்கு பின்பு பெண்ணின் பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்! எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்? முதலில் தோழி… மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம். ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு.அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

* நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

* நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும் பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

* உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும் பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

* திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

* கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.

Related posts

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

nathan

பைனாபிள் ரசம்

nathan

ஜவ்வரிசி சுண்டல்

nathan

எளிமையான மிளகு ரசம்

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan

சாம்பார் வைப்பது எப்படி? சமையல் சந்தேகங்கள்

nathan

செயின் பறிப்பு – கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?

nathan

கண்டந்திப்பிலி ரசம்

nathan

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமா?

nathan