30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ghdgdgdgj
மருத்துவ குறிப்பு

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

கடந்த 25 ஆண்டுகளில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும், குழந்தைகளைப் பாதிக்கும் டைப்-1 அல்லது ஜுவனைல் (juvenile) வகை சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இதற்கான சிகிச்சைமுறை மற்றும் இன்சுலின் எடுப்பதன் முக்கியத்துவம் பற்றி நம்மோடு பகிர்ந்துகொண்டார், முன்னணி நீரிழிவு நோய் மருத்துவர். V மோகன்.

டைப்-1, டைப்-2 சர்க்கரை நோய் என்றால் என்ன?

நம் உடலுக்குப் போதுமான அளவு வலிமை தருவது குளுகோஸ் எனப்படும் சர்க்கரைதான். ரத்தத்தில் இதன் அளவு அதிகரித்தால் சர்க்கரை நோய் ஏற்படும். சுமார் 40 வகையான சர்க்கரை நோய்கள் உள்ளன. அவற்றில் அதிக பாதிப்பு கொண்டிருப்பது டைப்-1 மற்றும் டைப்-2 வகையே. பெரும்பாலும் டைப்-2 சர்க்கரை நோய், 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்குத்தான் ஏற்படும். இவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இவர்கள், சர்க்கரை நோய் இருக்கிறதா என்று உறுதிசெய்தவுடன், உடல் எடையைக் குறைப்பது அவசியம். கட்டுப்பாடான டயட் பின்பற்றுவது நல்லது. நிச்சயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சீராக மாத்திரை அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு, பெரும்பாலும் இன்சுலின் தேவைப்படாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர், இந்த டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான்.
Diabetic medicines

ஆனால், டைப்-1 சர்க்கரை நோய் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் பாதிக்கும். பிறந்த குழந்தைக்குக்கூட இந்த டைப்-1 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரியவர்களுக்கும் டைப்-1 ஏற்படலாம். இவர்கள், நிச்சயமாக வாழும் காலம் வரை இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து முறை வரை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது சிறந்தது.
ghdgdgdgj
டைப்-1 நோயை எப்படித் தடுப்பது?
Diabetic Blood test

இதைத் தடுக்கவும் முடியாது, குணப்படுத்தவும் முடியாது. ஆனால், இன்சுலின் எடுத்துக்கொள்வதன்மூலம் நீண்ட காலம் நலமோடு வாழ முடியும். இன்சுலினைத் தவிர, வேறு எந்த மருந்தாலும் இந்த டைப்-1 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மாற்று மருந்தைத் தேடி போக வேண்டாம். அது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சிகிச்சைக்கு முன், உண்மையில் டைப்-1 நோய்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். இன்சுலின் ஊசிக்குப் பதிலாக இன்சுலின் பம்ப் உபயோகிக்கலாம்.

டைப்-1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம்?
Diabetic food habits

எந்த வகை சர்க்கரை நோய்க்கும், உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். கண்டிப்பாக இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதத்தின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். கடலை, பயறு, சுண்டல், சோயா, காளான், மீன், கோழி போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவதும் அவசியம். டைப்-1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். பெற்றோர்கள் பாசிட்டிவ்வாக இருந்தால், நிச்சயம் குழந்தைகளின் உடல்நிலையும் பாசிட்டிவ்வாக மாறும்.

கணைய மாற்று சிகிச்சைமூலம் டைப்-1 சர்க்கரை நோயை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?
Diabetes

கண்டிப்பாக முடியும். ஆனால், கணையம் கிடைப்பதிலிருக்கும் சிக்கல்கள் ஏராளம். உயிரோடு இருப்பவர்களிடமிருந்து கணையத்தை எடுக்கவே முடியாது. ஒருவரின் உயிர்நாடி நின்றதும், உடல் உறுப்பில் முதலில் பாதிப்படைவது கணையம்தான். இறந்தவர்களிடமிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்குள் கணையத்தை எடுத்து மாற்றி அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து நேரிடும். இது சாத்தியம். ஆனால், சாத்தியத்தின் அளவு மிகவும் குறைவு. இதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கர்ப்ப கால சர்க்கரைநோய் நிரந்தரமானதா?

கர்ப்ப கால சர்க்கரை நோய், கர்ப்பமடையும் அனைவருக்கும் ஏற்படாது. கருவுற்று இரண்டாவது ட்ரைமெஸ்டெரில் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பயப்படவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் இதற்கான சில சிகிச்சை முறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 50 முதல் 70 சதவிகிதம் வரை மீண்டும் சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இது, டைப்-2 நோயாக மாறிவிடும். எனவே, தொடர்ச்சியாக சோதனை செய்துகொள்வது அவசியம்.
Pregnancy Diabetes

ஏற்கெனவே, டைப்-1 நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு, கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவு நிச்சயம் அதிகமாகும். இவர்கள், கர்ப்பத்திற்கு முன் சர்க்கரையின் அளவைச் சீராக்கிக்கொள்வது சிறந்தது. இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சீரான சிகிச்சைமூலம், தாயிடமிருந்து குழந்தைக்கு சர்க்கரை நோய் பரவாமலிருக்கும். இது, நோய் இல்லை. உடலில் ஏற்படும் சிறிய குறைபாடு மட்டுமே. குழந்தைகளை அரவணைப்போடு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள், பல சாதனைகள் படைப்பதைக் கண்முன்னே பார்க்கலாம்.

Related posts

வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

nathan

நம் பண்டைய மருத்துவ பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ?

nathan

தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை

nathan

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

sangika

எலுமிச்சையும் பூண்டும் கொண்டு இதயத்தை காத்திடுங்கள்!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!

nathan

இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீங்க தான் அதிர்ஷ்டசாலி

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

நோய் நீக்கும் துளசிமாலை

nathan