29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hfjhfjh
தலைமுடி சிகிச்சை

கட்டாயம் இதை படியுங்கள்..பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

30 ப்ளஸ்ஸிலேயே முன்னந்தலையில் வழுக்கை விழுவதும், கூந்தல் மெலிந்து எலிவால் போல மாறுவதும் அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.

‘ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேஷியா’ எனப்படும் இந்தப் பிரச்னை பரம்பரையாகத் தொடரக் கூடியது. சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சைகளைத் தொடர்ந்தால் முன்னந்தலை வழுக்கை முற்றிலும் வழுக்கையாக மாறுவதைத் தவிர்க்கலாம்’’ என்கிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம். கூந்தல் மெலியும் பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள் என எல்லாவற்றையும் பகிர்கிறார் அவர்.

பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!
காரணங்கள்

`ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேஷியா’ பிரச்னைக்கான முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன். இது ‘டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான்’ ஆக (டிஹெச்டி) மாறும்போது கூந்தலின் வேர்ப்பகுதிகளைச் சுருக்குகிறது. அந்த இடத்திலிருந்து முளைக்கும் முடியானது மெலிதாக இருக்கிறது. இதை ‘வெலஸ் ஹேர்’ என்று சொல்கிறோம். திடீரென தெரியும் மெலிதான இந்த முடிகளைப் பார்த்து அவை புதிதாக முளைத்திருப்பதாகப் பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவை ஏற்கெனவே அவர்களுக்கு இருந்த தடிமனான முடிகளின் மெலிந்த வடிவமே. மெலிந்த இந்த முடிகளை மீண்டும் பழையநிலைக்குத் திருப்ப முடியாது. பரம்பரை பிரச்னை எனில் இது இன்னும் தீவிரமாக பாதிக்கும்.
hfjhfjh
பிற காரணங்கள்…

*ஊட்டச்சத்து குறைபாடு * மன அழுத்தம்

*தூக்கமின்மை * ஹார்மோன் சமநிலையின்மை

*பிசிஓடி * காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம்

* தைராய்டு * இரவில் நீண்ட நேரம் மொபைல் திரைகளைப் பார்ப்பது.

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேஷியா பிரச்னை ஹார்மோன் சம்பந்தப்பட்டது. ஹார்மோன் தொடர்பான எந்தப் பிரச்னை களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. உதாரணத்துக்கு நீரிழிவு மற்றும் பிசிஓடி. இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பே கூந்தல் பராமரிப்பில் அக்கறை காட்டினால் தீவிரத்தைத் தவிர்க்க முடியும்.

சிகிச்சைகள்

* முழுமையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

* கூந்தல் சுத்தம் என்பது மிகமிக முக்கியம். தலைக்குக் குளிக்கும்போது முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை குளிப்பதாகப் பலரும் சொல்வதைக் கேட்கிறேன். அது கூந்தல் உதிர்வை இன்னும் மோசமாக்கும். தினமும் தலை குளிக்கும் பழக்கமே ஆரோக்கியமானது.

* தினமும் தலைக்குக் குளிப்பவர்கள் தண்ணீரின் தன்மை, ஷாம்பூவின் தரம் இரண்டையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

* பிஹெச் அளவு 5 முதல் 7 வரை உள்ள ஷாம்பூவே சிறந்தது. ஆனால், பல ஷாம்பூகளில் அது குறிப்பிடப்படுவதில்லை. எனவே ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. தேர்ந்தெடுக்கும் ஷாம்பூவில் பாரபென் மற்றும் எஸ்எல்எஸ் ஃப்ரீ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.

* தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் தலைக்குக் குளிக்க நல்ல தண்ணீரைத் தேடிச் செல்வது சாத்தியமே இல்லை. அப்படிப்பட்ட நிலையில் கடைசியாக கூந்தலை அலசும்போது ஒரு மக் அளவாவது நல்ல தண்ணீர் விட்டு அலசலாம்.

* தேவைப்பட்டால் மருத்துவர் உங்களுக்கு பயோட்டின் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். நெல்லிக்காய் கலந்த மாத்திரைகள், டானிக் போன்றவற்றையும் பரிந்துரைப்பார்.

* கூந்தல் என்பது கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. எனவே உணவில் புரதத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் கூந்தல் உதிர்வுக்கு மருந்துகளைத் தேடிச் செல்வதைத் தவிர்க்க முடியும். கூந்தல் உதிர்வு அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆலோசனை பெற்று ஆரம்பகட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு கூந்தல் பராமரிப்பில் கவனம் செலுத்தினாலே பிரச்னையில் இருந்து மீளலாம்.

Related posts

முடி உதிரலை தடுத்து அடர்த்தியாக புதிய முடிகளை வளர செய்ய ஒரே தீர்வு எலுமிச்சை!முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா??? இத பண்ணுங்க முதல்ல

nathan

உங்களுக்கு தெரியுமா சீயக்காய் பொடியை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது…!

nathan

ஹேர் ஆயில் தயாரிப்பு :

nathan

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா

nathan

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!

nathan

உங்களுக்கு எப்ப முடி வெட்டணும் தெரியுமா…?

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?hair tips in tamil

nathan

முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த எளிய மற்றும் உபயோகமான வழிகளே போதுமாம்…!

nathan