29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி உதிர்வு தொல்லைக்கு நிரந்தர தீர்வு

பல சத்துக்கள் அடங்கிய வெங்காயத்தினை நமது உணவில் அதிகமாகவே சேர்த்து வரும் நிலையில், வெங்காயத்தின் தோலை நாம் வெளியே தூக்கி எறிந்துவிடுகின்றோம்.

ஆனால் நாம் தூக்கி எரியும் வெங்காயத்தின் தோலில் இருக்கும் அதிசயம் பல இருக்கின்றது. வெங்காயத் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

இந்த ஊட்டச்சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்துடன் நமது சருமத்தின் அழகையும் அதிகரிக்க உதவுகின்றன. வெங்காயத் தோலை பயன்படுத்தி வியக்கத்தக்க பல நன்மைகளை நாம் அடைய முடியும்.

 

  • ஒரு ஆய்வின்படி, வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை தடுக்கின்றது.
  • வெங்காய தோலில் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கின்றது.
  • வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு. சளி பிரச்சினைக்கும் தீர்வாக அமைகின்றது.
  • இன்று பெண்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வு தான். அவ்வாறான பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய தோலை தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறிய பின்பு தலையில் மசாஜ் செய்து விட்டு பின்பு ஷாம்பு போட்டு குளித்தால், முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லை இருக்காது.
  • வெங்காய சாற்றை மஞ்சளில் கலந்து முகத்தில் தடவினால், முகத்தின் புள்ளிகள் அகற்றப்படும். வெங்காய தோலின் சாறு இறந்த சருமத்தை (Dead skin) அகற்ற உதவி செய்வதுடன், சருமத்தை பளபளப்பாகவும் வைக்கின்றது.

Related posts

உங்கள் கூந்தலைக் காப்பாற்றும் சமையல் சோடா ஷாம்பூவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

சும்மா தலைக்கு குளிச்சா என்ன ஆகும் தெரியுமா ?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

nathan

பெண்களே நரைமுடியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உண்மையிலேயே மௌத் வாஷ் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்குமா?

nathan

தலைமுடியை பரிசோதித்தாலே கூந்தல் சொல்லும் ஆரோக்கிய ரகசியம்!

nathan

தல… குட்டும் பிரச்னைகள்… எட்டுத் தீர்வுகள்!

nathan

மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு சூப்பர் காம்பினேஷனை உபயோகப்படுத்துவது எப்படி?

nathan

தலைக்கு குளிக்கும் போது நாம் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan