27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Screen
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அல்சர் வலியால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!…

இன்றைய தலைமுறையினர் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பது மிக மிக குறைவே… அவ்வாறு மாறி வரும் உணவுமுறைகள் நமக்கு நல்லது செய்வதில்லை… பல விதமான நோய்களைக் கொடுத்து தீமைகளையே செய்து வருகின்றன.

அவ்வாறு வரும் நோய்களில் ஒன்று தான் பெப்டிக் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாகும். அல்சர் எனப்படும் இந்த நோய் உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றினை அதிகமாக தாக்குகின்றது.

இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு மட்டும் 10 மில்லியன் மக்களைத் தாக்கும் இந்நோயின் வலியை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த அளவிற்கு தீவிரமாக மரண வலியைக் கொடுப்பது மட்டுமின்றி நினைத்த உணவுகளை நினைத்த நேரத்தில் சாப்பிடுவது என்பது முடியாத காரியம்.

ஆரம்பநிலையில் மருத்துவரை அணுகினால் இந்நோயின் தீவிரத்திலிருந்தும், முழுமையாகவும் குணம் பெற்று விடலாம். மேலும் உணவு பழக்கத்தில் கவனமாக இருந்தால் இந்நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம்.

எந்த வயதினரை அதிகமாக தாக்குகின்றது?

19 முதல் 60 வயது உள்ளவர்களை அதிகமாகவும், 3 முதல் 18 வயது வரை உள்ளவர்களை ஒரளவும், பிறந்த குழந்தை முதல் 3 வயது வரை உள்ளவர்களை மிக மிக குறைந்த அளவும் இந்நோய் தாக்குகின்றது.

Screen

எதனால் ஏற்படுகின்றது?
  • அதிகப்படியான டென்ஷன்
  • தூக்கமின்மை
  • சரியான நேரத்தில் சாப்பிடாமை
  • மன உளைச்சல்
  • ஆல்கஹால்
  • காரமான மற்றும் மசாலா உணவுகள்
இந்நோயின் அறிகுறிகள்
  • மேல் வயிற்று வலி
  • நெஞ்செரிச்சல்
  • இரவில் வலி
  • உப்பிசம், அஜீரணம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி
  • அதிக காற்றுப்போக்கு
  • சோர்வு, எடை குறைவு
  • வாந்தி மற்றும் வெளிப்போக்கில் ரத்தம்
  • பசியின்மை
அல்சருக்கு சிறந்த உணவுகள்
  1. நார்சத்து உள்ள காய்கறிகள்
  2. முட்டை
  3. மீன்
  4. சோயா பீன்ஸ்
  5. பருப்பு வகைகள்
  6. ப்ரோகலி எனும் பச்சை காலி ப்ளவர்
  7. ஆப்பிள்
  8. க்ரீன்டீ
  9. தயிர்
  10. மோர்
  11. தேன்
  12. பூண்டு
தவிர்க்க வேண்டிய உணவுகள்
  1. காபி
  2. புட்டியில் அடைக்கப்பட்ட பானங்கள்
  3. சிவப்பு இறைச்சி
  4. சோடா மற்றும் குளிர்பானங்கள்
  5. பால்
  6. மிளகாய்
  7. அதிகம் வறுத்த உணவு
  8. அதிக மசாலா உணவு

 

வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்
  • அல்சருக்கு முக்கிய காரணம் ஸ்டிரெஸ்.. தினசரி தியானம் அவசியம்
  • வாழைப்பழம் ஹெச் பைலோரியால் உருவாகும் அல்சர் வராமல் தடுக்கின்றது
  • அதிகமான நீர் பருகுவது, தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வது
  • வேகமாக உணவு உண்ணாமல் நிதானமாக சாப்பிட வேண்டும். இதனால் தீவிர அஜீரணம் செஞ்செரிச்சல் அல்சரில் கொண்டு வந்து விடுகின்றது.
  • காரமான மற்றும் அதிக மாசால உணவுகளை உண்பதை தவிர்த்து, அதுவும் தூங்கச் செல்வதற்கு முன்பு அதிக கார உணவு, அதிக உணவு, சிகரெட் ஆகியவற்றினை உடனடியாக நிறுத்தி விட வேண்டும்
  • வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • எந்நேரமும் நொறுக்கு தீனி உண்பதை நிறுத்தி விடவும்.

Related posts

இதோ துளசியின் விரிவான மருத்துவப் பயன்கள் உள்ளே…..

nathan

ஆண்கள் தூதுவளை இலையைச் சாப்பிட்டு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?..

sangika

உங்களுக்கு தெரியுமா காய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….?

nathan

உங்களுக்கு தெரியுமா பைல்ஸ் வருவதற்கு இவைகள் தான் காரணம் என்பது தெரியுமா?

nathan

தீராத சளித் தொல்லைக்கு நிவாரணம் !சூப்பர் டிப்ஸ்…

nathan

வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? அப்ப இத பாடியுங்க …..

nathan

தலை பாரத்திற்க்கான சித்த மருந்து

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா?

nathan

வேதனை தரும் மூட்டு வலியை சந்திப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பழங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan