இன்றுள்ள நிலையில் பல்வேறு விதமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் நாம்., நமது அழகை பராமரிப்பதில் முக்கியத்தும் அளிப்பது நமது அழகை அதிகரிக்க உபயோகம் செய்யும். எளிய முறையில் மாம்பழத்தை வைத்து நமது அழகை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.
மாம்பழ பேஸ் பேக்:
மாம்பழ பேஸ் பேக் என்பது மாம்பழத்தின் சதை பகுதியை எடுத்து., முகத்தில் தேய்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் நன்றாக கைகளில் தடவி கொண்டு இருக்க வேண்டும்., இதற்கு பின்னர் சுமார் ஐந்து நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து., குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால்., சருமத்தின் நிறமானது அதிகரிக்கும். இந்த முறையை தொடர்ந்து மூன்று வாரத்திற்கு செய்தாலே போதுமானது.
மாம்பழ கடலை மாவு பேஸ் பேக்:
மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் என்பது சருமத்தில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு நல்ல மாஸ்க்காக உதவுகிறது. நன்றாக பழுத்த மாம்பழத்தின் சதையை எடுத்து கொண்டு., அதனுடன் கடலை மாவை சேர்த்து., சுமார் அரை தே.கரண்டி தேன் மற்றும் பாதாம்களை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை நீரினால் கழுவினால் முகம் பொலிவு பெரும்.
மாம்பழ தயிர் பேஸ் பேக்:
மாம்பழ தயிர் பேஸ் பேக் என்பது சருமத்தில் அதிகளவு எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பின் நல்ல தீர்வை தரும். மாம்பழத்துடன் தயிர் மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலந்து., முகத்தில் தேய்த்து சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவினால் முகம் நல்ல அழகை பெரும்.