பெண்களில் அதிகமானோர் தங்களது முகத்தினை அழகுபடுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர்.
மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறையாவது பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களது முகத்தினை அழகுபடுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அவ்வாறு செய்வதினால் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
எந்த வித உபாதைகளும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் முகத்தினை அழகு படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது மாதுளை பழம். மாதுளை ஜூஸ் குடிப்பதனால் இரத்த ஓட்டம் அதிகமாவது மட்டுமல்ல அதனை அரைத்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவும் பெரும்.
செய்முறை :
மாதுளையை நன்கு அரைத்து அதனுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி அரைமணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் முகம் பொலிவு பெரும். இவ்வாறு செய்வதினால் முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல் முகத்தில் நீரோட்டத்தை அதிகப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் நல்ல முன்னேற்றத்தை உணரலாம் .