தற்காலத்தில் ‘டெட்டனஸ்” ஊசிபோல அந்தக் காலத்தில் ”பிரசவ ஜன்னி” வராமல் காக்கும் மருந்தாகப் பயனாகியது. குங்குமப்பூ எனில் மிகையன்று இதனால் பிரசவ வலிகளும் குறைந்து குழந்தை பிறந்தவுடன் கருப்பையில் தங்கும் அழுக்குகளையும் அகற்றும் தன்மை இதற்குண்டு. பசியின்மை. அஜீரணம் மலச்சிக்கல் கபக்கோளாறு ஆகியவற்றால் மகப்பேறுற்ற மகளிர் தொல்லை அடையாமல் காக்க உதவும் அரிய மூலிகை” குங்குமப் பூ”.
கருதரிப்பதற்கு முன்னதாகவே ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மாத்திரையை எடுத்துக் கொள்வதால், குழந்தைக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். கருவுற்ற ஆரம்பத்திலேயே ஹீமோகுளோபின், தைராய்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்ற அடிப்படை டெஸ்ட்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவது இயல்பு. இதனால், காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே இரும்பு, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். கருவுற்ற காலத்தில் கட்டாயமாக மூன்று முறை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற ஆரம்ப காலத்தில் கரு சரியாக கர்ப்பப்பையில் உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். 18-20 வாரத்தில் முழுமையாக வளர்ந்த கரு, பிறவிக் குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கருவுற்ற கடைசி மாதங்களில் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா என்றும், பனிக்குடம் நீர் சரியாக உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற காலங்களில் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். 40 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.