22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
6630083004d604d75498162ee71813a4a2b0ef0e 827270558
தொப்பை குறைய

சூப்பர் டிப்ஸ்,!தொப்பையைக் குறைக்க இதை ஒரு கப் சாப்பிட்டால் போதும்.!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளுவிதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு, களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொளுத்தவன், கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பழமொழிகள் மூலம் மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.

6630083004d604d75498162ee71813a4a2b0ef0e 827270558

அதாவது மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப் பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும்.

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:

கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப் புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்கமாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.

அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர் கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தில் தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலக்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும். அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

Related posts

வயிறு குறைய.. ஆயுர்வேத மருத்துவம்!

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan

ஏழே நாட்களில் உங்கள் தொப்பை குறைய வேண்டுமா?

nathan

தொப்பையைக் குறைக்கவா..? 15 நாட்களில் சிறந்த வழி.

nathan

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்…!

nathan

செயற்கை குளிர்பானங்களே தொப்பை வரக்காரணம்

nathan

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!

nathan

நீங்கள் தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அப்ப இத படிங்க!

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika