26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
fgygy
அறுசுவைஇனிப்பு வகைகள்

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

கோதுமை பாதுஷா

தேவையானவை: கோதுமை மாவு – ஒன்றரை கப், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், கெட்டியான நெய் – அரை கப், தயிர் – 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – அரை கப், எண்ணெய் – பொரிக்க.

dfdf

செய்முறை: சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரி யாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக் கவும்.

பைனாப்பிள் பூந்தி

தேவையானவை: கடலை மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றேகால் கப், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பைனாப்பிள் ஜூஸ் – கால் கப், பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள், எண்ணெய் – பொரிக்க.
drfdf

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.

டேட்ஸ் எள்ளு உருண்டை

தேவையானவை: பேரீச்சை – 200 கிராம், எள் – 50 கிராம், முந்திரி – 6, ஏலக்காய்த்தூள் -ஒரு சிட்டிகை, தேன் – 1 டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன்.

fgygy

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். பேரீச்சையை பொடியாக நறுக்கி, நன்கு மசிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டை களாக உருட்டி பரிமாறவும்.

ரோஸ் டைமண்ட்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சோள மாவு – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், ரோஜா இதழ்கள் – கால் கப், ரோஸ் எசன்ஸ் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்க.
fgfg 1
செய்முறை: கோதுமை மாவுடன் சோள மாவு, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுபோல கெட்டியாகப் பிசைந்து, உருட்டி, சிறு சிறு டைமண்ட் வடிவ துண்டுகளாக நறுக்கி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தட்டில் எடுத்து வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி துண்டுகளை மொறுமொறுப் பாக பொரிக்கவும். அகல மான பாத்திரத்தில் சர்க் கரை, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இரட்டைக் கம்பி பதம் வந்ததும் இறக்கிவைத்து, ரோஜா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த கோதுமைத் துண்டுகளை அதில் சேர்த்துப் புரட்டி எடுத்து, தட்டில் கொட்டி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.

Related posts

ப்ரெட் புட்டிங் : செய்முறைகளுடன்…!

nathan

பொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி!…

sangika

சத்தான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

sangika

சுட்ட கத்திரிக்காய் சம்பல்

nathan

நுங்குப் பணியாரம்

nathan

தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி

nathan

பலம் தரும் பாரம்பர்ய மிட்டாய்!

nathan

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

sangika