சிறுநீரக கற்கள் என்பது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படும் நிகழ்வாகும். இது ஒரு நபருக்கு ஒரு முறை வரும் பட்சத்தில் மீண்டும் இந்த நோய்யானது ஏற்பட வாய்ப்புள்ளது. நமது முன்னோர்கள் சிறுநீர கற்களை கரைப்பதற்கு பார்ஸ்லி என்ற மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளார்.
பார்ஸ்லியில் இருக்கும் வைட்டமின் ஏ., வைட்டமின் சி., ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்த்தின் காரணமாக சிறுநீரகத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கி அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பார்ஸ்லி தேநீர் வடிவில் அருந்துவதன் மூலமாக நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
இதன் மூலமாக சிறுநீரகத்தின் உற்பத்தியானது வெகுவாக அதிகரித்து., சிறுநீரகத்தை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது.
இதன் மூலமாக நமது உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது. அந்த வகையில் பார்ஸ்லி தேநீர் செய்வது எப்படி என்று இனி காண்போம்.
பார்ஸ்லி தேநீர் செய்யும் முறை:
பார்ஸ்லி (கொத்தமல்லி) கீரை – 1 கட்டு.,
நீர் – 8 குவளை.,
தேன் – 2 தே. கரண்டி.,
எலுமிச்சை பழம் – 1/2 (சாறாக)…
பார்ஸ்லி தேநீர் தயாரிக்கும் முறை:
எடுத்துக்கொண்ட பார்ஸ்லி கீரையை நன்றாக நீரில் கழுவி நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரம் ஒன்றில் நீரை ஊற்றி கொதிக்க வைத்து பின்னர் கீரையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
அந்த நீரில் தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து பருக வேண்டும்.
பார்ஸ்லி தேநீரின் நன்மைகள்:
தினமும் ஒரு குவளை முதல் இரண்டு குவளை இந்த தேநீரை வாரத்திற்கு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை வெளியேற்றும்.
இந்த தேநீரில் இருக்கும் மகத்துவத்தை மூலமாக சிறுநீரக திசுக்கள் உப்புக்களை உறிஞ்சு தக்கவைத்து கொள்வதை தடுத்து நிறுத்தி., சிறுநீரகத்தில் கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.
இதுமட்டுமல்லாது மனதளவில் ஏற்படும் பதற்றத்தை குறைத்து., நமது உடலின் நரம்புகளை அமைதியாக்கி நமது உடல் நலத்தை பாதுகாக்கிறது.
குறிப்பு: இந்த தேநீரை கர்ப்பிணிகள் குடிக்கும் பட்சத்தில் கருச்சிதைவு ஏற்ப்படும் வாய்ப்புள்ளது. ஆகவே., கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த தேநீரை தவிர்ப்பது நல்லது.