29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
psx 20191016 114027 905550703
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் எவ்வாறு தயாரிப்பது, அதை எப்படி பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சல் என்ற பெயரில் தினமும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அட்மிட் ஆகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தனி. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உயிர் இழப்பை தடுக்கவும் தமிழக அரசு நிலவேம்பு கசாயத்தை தான் அளித்து வருகிறது.

காரணம், டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.

இதை கட்டுப்படுத்த தவறினால் மரணம் நிச்சயம். நிலவேம்பு கசாயம் அருந்தும் போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

psx 20191016 114027 905550703

ஆனால், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முன்பு தீயாக பரவியது. இப்போது நிலவேம்பு கசாயம் என்றால் மக்கள் ஒருவித அச்சத்துடனையே பார்க்கிறார்கள்.
இது குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: நிலவேம்பு என்பதின் மறு பெயர் சிறியாநங்கை. இது வீடு, காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் பரவலாக கிடைக்கிறது. இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.

தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது. அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும்.

அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில், உணவு சாப்பிடுவதற்கு முன்பாக குடிக்க வேண்டும்.
இந்த கசாயத்தை தயார் செய்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி தான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது. மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும்.

மிளகு விஷத்தன்மையை முறிக்கும். இதைப்போன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நிலவேம்பு கசாயத்தை பயப்படாமல் தயாரித்து குடிக்கலாம். இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினர்.

Related posts

வாஷிங் மெஷினில் துவைக்கிறீர்களா? கவனம் தேவை

nathan

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

nathan

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

nathan

இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீங்க தான் அதிர்ஷ்டசாலி

nathan

திருமணத்திற்கு தயாரா?அப்ப உடனே இத படிங்க…

nathan

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?

nathan

பெண்களை அதிகளவில் தாக்கும் மூட்டுவலி

nathan

ஞாபகமறதி நோய் (Dementia)

nathan

இதை குடித்து உங்கள் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்துங்கள்!

nathan