24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
​பொதுவானவை

‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்!!

[ad_1]

‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்!
 காய்கறிகள்
பசுமையாக பச்சைப் பசேலென்று இருந்தால் மட்டும், அப்படியே வாங்கி விட
முடியுமா? ஒவ்வொரு காயையும் ஒவ்வொரு விதமாகப் பார்த்து வாங்க வேண்டும். சில
காய்களைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றிப் பார்ப்போமா?

p126

வெண்டைக்காய் – நுனியை ஒடித்தால் ஒடியவேண்டும்.

அவரை, பீன்ஸ் – நார் எளிதில் உரிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்

கொத்தவரங்காய் – உடைத்தால் உடைய வேண்டும். வளையக் கூடாது.

வாழைத்தண்டு – பளிச் வெள்ளையில் இருக்க வேண்டும்.

முருங்கைக்காய் – முறுக்கினால் வளைய வேண்டும்.

வெங்காயம் – கருநீல நிறம், அழுகலுக்கான அடையாளம். இளம் நீல நிறம் நல்லது.

சேனை – சிவப்பாக இருந்தால் அரிக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டாம்.

தேங்காய் – குலுக்கிப் பார்த்தால் தண்ணீர் உணரப்பட வேண்டும். கண் அருகே அமுங்கக் கூடாது.

உருளைக்கிழங்கு – அழுத்தினால் அமுங்கக் கூடாது.

கீரைத்தண்டு – ஒடித்தால் ஒடிய வேண்டும்.

முள்ளங்கி – வேர்கள் தோன்றாததாக இருக்கவேண்டும்

பச்சை மிளகாய் – கெட்டியாக இருக்கவேண்டும்

பூண்டு – அழுத்தமானதாக பூண்டு இருக்கவேண்டும்.

காலிஃபளவர் – பூத்திருக்கக் கூடாது

கருணைக்கிழங்கு – இரு நாட்களாவது காய்ந்த பிறகு சமைக்கவும்.

p127

கோவைக்காய் – அமுங்கக் கூடாது

முட்டைக்கோஸ் – கெட்டியாக இருக்க வேண்டும்.

புடலங்காய் – உடைத்துப் பார்த்தால் சட்டென்று உடைய வேண்டும் நார் இருக்கக்கூடாது

பீட்ரூட், கேரட் – நல்ல நிறத்தில் இருக்க வேண்டும்

பாகற்காய் – நல்ல கரும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அமுங்கக் கூடாது.

வாழைப்பூ – கெட்டியான பூவின், உள்ளே உள்ளவை பிஞ்சாக இருக்க வேண்டும். மலர்ந்து இருந்தால் முற்றல் என்று புரிந்து கொண்டு தவிர்க்கலாம்.

வாழைக்காய் – பட்டையாக மூன்றுபுறமும் கெட்டியாக இருக்க வேண்டும்

சுரைக்காய் – கைக்கு கனமாக இருக்க வேண்டும். நீர் வற்றியது லேசாக இருக்கும்.

கத்திரிக்காய் – காம்பு பசுமையாக இருக்க வேண்டும்

காய்கறிக் கடைக்குப் போனால் மேலே சொன்ன மாதிரி காயைத் தேர்ந்தெடுத்து வாங்குங்க. கடைக்காரர் முறைத்தால் கண்டுக்காதீங்க?

 

Related posts

சூப்பரான கல்யாண வீட்டு சாம்பார் ரகசியம் இதுதான்!

nathan

எளிமையான மிளகு ரசம்

nathan

தனிமையுணர்வு ஏற்பட காரணங்கள் என்ன?: தடுப்பது எப்படி?

nathan

சில்லி பரோட்டா

nathan

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

nathan

கணவன் – மனைவி ஆனந்தமாய் வாழ வேண்டுமா?

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

மட்டன் ரசம்

nathan

காராமணி சுண்டல்

nathan