29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
ggjh
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ் பொடுகை நீக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்….!

பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊறவிட்டு, காலையில் எழுந்ததும் தலையை ஷாம்பு கொண்டு அலசவேண்டும்.

சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும். அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.

மிளகுத்தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.
ggjh
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பளபளக்கும்.

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.

Related posts

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா?

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.

nathan

தெரிஞ்சிக்கங்க… முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

nathan

கூந்தல் உதிர்வதைத் தடுக்கும் இயற்கை வழிகள்

nathan

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமாரிக்க எளிய வழிமுறைகள்

nathan

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்!

nathan