26.1 C
Chennai
Monday, Dec 30, 2024
171801879273ee2a6206f09fc66f28b885b57bdd2 1029858957
அழகு குறிப்புகள்எடை குறைய

இந்த பழக்கவழக்கங்கள்தான் உடல் பருமனாவதற்கு காரணம்.!

நாம் பருமனாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் பருமனாகிறோமே என நாம் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். அதைப் பற்றி இங்கு காண்போம்.

முதலில் நாம் சாப்பிடும் உணவுகளை மென்று முழுங்காமல், அவசர அவசரமாக உணவை முழுங்குவதால் நம் ஜீரணத்தன்மை பாதிக்கின்றது. அதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் நம் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகிறது. அதனால்தான் அந்த காலத்தில் ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்று சொன்னார்கள். எனவே நாம் சாப்பிடும் உணவுகளை மென்று சாப்பிட வேண்டும்.

171801879273ee2a6206f09fc66f28b885b57bdd2 1029858957

முடிந்த அளவுக்கு நாம் சாப்பாட்டை ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

நாம் சாப்பிட நேரமில்லை என்று சொல்லாமல், வீட்டிலேயே நேரத்தைக் குறைக்கும் வழியில் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளலாம். இவை நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

பெரும்பாலானோருக்கு இரவு 7 மணிக்கே பசி எடுக்கும். எனவே, அவர்களுக்கு நொறுக்கு தீனியின் மீது நாட்டம் போகும். மேலும் அது உடல் பருமனை அதிகப்படுத்த மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே அந்த நேரத்தில் பழங்கள் அல்லது சூப் சாப்பிட்டுவிட்டு, 8 மணிக்கு பிறகு உணவை சாப்பிடலாம்.

மனஅழுத்தத்தில் இருக்கும்போது மற்றும் கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மேலும் சிலருக்கு மனஅழுத்தம் இருக்கும்போது சாப்பிட தோன்றும். அதுவும் தவறு. இருப்பினும் அந்த சமயத்தில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, தண்ணீரை அருந்தலாம்.

தெரிந்தோ, தெரியாமலோ சமைக்கும் பழக்கம் கூட உடல் பருமனுக்கு காரணமாகிவிடுகிறது. ஏனெனில் ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல், ருசிக்காக பொரித்து சாப்பிடுவது, காய்கறிகளுக்கு பதிலாக கார்போ ஹைட்ரேட் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்ணுவது போன்றவைகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது.

Related posts

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

nathan

சாண்டி மகள் லாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்?

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில ஆலோசனைகள்

nathan

முகப்பருவிலிருந்து விடுதலை பெற……

nathan

அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க. எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா

nathan

அழகான பாதத்திற்கு

nathan