27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
14388335518e345818890d94ab43645686817f78c1596451460
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்: –

மட்டன் – 3/4 கிலோ

சின்ன வெங்காயம் – 1/2 கிலோ

தக்காளி – 1

மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

பட்டை – 2

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

கசகசா – 1 டீஸ்பூன்

தேங்காய் – 1 மூடி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

14388335518e345818890d94ab43645686817f78c1596451460

வரமிளகாய் – 10

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!

Related posts

ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan

இதை முயன்று பாருங்கள் உங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா?

nathan

தினமும் ஹோட்டலில் சாப்பிடாதீங்க – ஆபத்து

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையா?

nathan